கொரோனோ தொற்றில் சென்னையை முந்தியது கோவை!
By : Mohan Raj
கொரோனோ இரண்டாம் அலையில் தமிழகம் மிகப்பெரிய இழப்பை எதிர்கொண்டு வருகிறது. ஊரடங்கை அமல்படுத்தியும் கொரோனோ தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. இந்த நிலையில் சென்னை'யை விட கொரோனோ தொற்றில் கோவை அதிகமாகியுள்ளது.
தினசரி கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையில் தலைநகர் சென்னையை முந்தியுள்ளது கோவை. நேற்று மட்டும் 4268 பேர் புதிதாக நோய் தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். சென்னையில் நேற்று 3561 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
35707 தற்போது கோவையில் நோய் தொற்று பாதிப்புடன் மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 31 பேர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளனர். 2787 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.
இதுவரை கோவையில் 151077 பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். கோவையில் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் வசதி கொண்ட 3805 படுக்கைகளில் 40 படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளன. ஆக்ஸிஜன் வசதி இல்லாத 3149 படுக்கைகளில் 503 படுக்கையும், 708 ஐசியூ படுக்கைகளில் 6 படுக்கை மட்டுமே காலியாக உள்ளது. கொரோனா மருத்துவ மையங்களில் உள்ள 2947 படுக்கைகளில் 605 காலியாக உள்ளது.