Kathir News
Begin typing your search above and press return to search.

வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்க தமிழக அரசு அரசாணை!

வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்க தமிழக அரசு அரசாணை!
X

ParthasarathyBy : Parthasarathy

  |  31 May 2021 1:23 PM IST

2017, 2018 மற்றும் 2019 ஆகிய மூன்று ஆண்டுகளில் வேலை வாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்க தவறியவர்கள் பணிவாய்ப்பினை பெரும் வகையில் மீண்டும் ஒரு முறை புதுப்பித்து கொள்ள சிறப்பு புதுப்பித்தல் சலுகையை தமிழக அரசு 28.05.2021 அன்று அரசாணை ஒன்றை வெளியிட்டது.


இந்த அரசாணையில் "இச்சலுகையை பெற விரும்பும் பதிவுதாரர்கள் இந்த அரசாணை வெளியிடப்பட்ட நாளான 28.05.2021 முதல் மூன்று மாதங்களுக்குள் அதாவது 27.08.2021-க்குள் இணையம் வாயிலாக தங்கள் பதிவினை புதுப்பித்துக் கொள்ளலாம். அவ்வாறு இணையம் வாயிலாக புதுப்பித்துக்கொள்ள இயலாதவர்கள் 27.08.2021-க்குள் சம்மந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்து புதுப்பித்து கொள்ளலாம். புதுப்பித்தல் மேற்கொள்ளும் பொழுது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி புதுப்பித்துக்கொள்ளுமாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் கோ. வீர ராகவராவ் தெரிவித்துள்ளார்".

Next Story
கதிர் தொகுப்பு
Trending News