பகவதி அம்மன் கோயிலில் தீ விபத்தினால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்ட எல்.முருகன்!
By : Parthasarathy
குமரி மாவட்டத்தில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் நேற்று 02.06.2021) காலை 6.30 மணியளவில் கருவறையில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி நேரில் பார்வையிட்டார். அதன் பின் அவர் வேதனைக்குரிய இந்த தீ விபத்திற்கான காரணிகளை விரைந்து கண்டுபிடித்து ஆகம விதிப்படி ஆலயத்தை திறந்து தினசரி பூஜைகள் நடக்க அறநிலைத்துறை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து இன்று காலை பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகன் குமரியில் உள்ள பகவாதிஅம்மன் கோயிலுக்கு நேரில் சென்று தீ விபத்தால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டார். அதன் பின் அங்கு இருந்த காவல்துறையினரிடம் தீ விபத்திற்கான காரணங்கள் குறித்து விரைந்து விசாரிக்குமாறு கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்வின் போது சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.ஆர். காந்தி, நைனார் நாகேந்திரன் ஆகியோர் உடன் இருந்து கோயிலில் இருந்த சேதங்களை பார்வையிட்டனர்.