Kathir News
Begin typing your search above and press return to search.

பராமரிப்பு பணி தற்காலிக நிறுத்தம் - இப்பவே இவ்வளவு பவர் கட்! அப்போ பராமரிப்பு துவங்கினா?

பராமரிப்பு பணி தற்காலிக நிறுத்தம் - இப்பவே இவ்வளவு பவர் கட்! அப்போ பராமரிப்பு துவங்கினா?
X

MuruganandhamBy : Muruganandham

  |  17 Jun 2021 7:03 AM IST

மிகவும் அவசியமான தவிர்க்க முடியாத பராமரிப்புப் பணிகள் மட்டும் செய்யப்படுகிறது. ஊரடங்கு முடியும் வரை பராமரிப்பு பணிகளுக்கு அனுமதி தருவது தற்காலிமாக நிறுத்தப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். எனவே தீவிர ஊரடங்கு முடியும் காலம் வரை மின் தடை தமிழகத்தில் ஏற்படாது என்று அரசு உறுதி தெரிவித்துள்ளது.

இந்த நிலையிலும், அண்மைக்காலத்தில் தினசரி மின்தடை ஏற்படுகிறது. இதற்கான காரணத்தை மின்சாரத்துறை அமைச்சரிடம் கேட்டால், ஆறு மாத காலமாக எந்தவித பராமரிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்படாததால், ஆங்காங்கே மின்தடை ஏற்பட்டது.

தற்பொழுது மிகவும் அவசியமான தவிர்க்க முடியாத பராமரிப்புப் பணிகள் மட்டும் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.

எல்லா ஊர்களிலுமே அண்மைக்காலமாக தினசரி மின் தடை இருந்து வருகிறது. திடீரென 5 நிமிடம் அல்லது 10 நிமிடம் போகும் மின்சாரம், பிறகு வந்துவிடும். இப்படி மின்சாரம் திடிரென கட்டாகும் சம்பவங்கள் அதிமாகி உள்ளது. சில இடங்களில் திரும்ப பவர் வர மூன்று மணி நேரம் வரை கூட ஆகும்.

இதனால், மின்விசிறியை இயக்க முடியாததால், கொரோனாவுக்கு வீட்டிலேயே சிகிச்சை பெறுவோர், குழந்தைகள், முதியோர் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வீட்டு உபயோக மின்சாதன பொருட்கள் பழுதாகும் நிலை உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News