Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகம் எல்லை வந்த கிருஷ்ணா நதி நீரை அமைச்சர் மலர் தூவி வரவேற்றார்!

தமிழகம் எல்லை வந்த கிருஷ்ணா நதி நீரை அமைச்சர் மலர் தூவி வரவேற்றார்!
X

ParthasarathyBy : Parthasarathy

  |  17 Jun 2021 12:22 PM GMT

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் விதமாக கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு ஆண்டுதோறும் 12 TMC தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். ஜனவரியில் இருந்து ஏப்ரல் மாதம் வரை 4 TMC யும், ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை 8 TMC தண்ணீரையும் ஆந்திர மாநிலத்தில் உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்துவிடவேண்டும். அதன் அடிப்படையில் கடந்த 14 ஆம் தேதி காலை ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 2,100 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.


கடந்த ஆண்டு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி 7.656 TMC தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து அடைந்தது. இந்த ஆண்டு கோடை வெயில் காரணமாக பூண்டி ஏரியின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது.தற்போது ஏரியில் வெறும் 187 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டும் இருப்பு உள்ளது. சென்னை மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள், பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடும்படி ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதினர்.

அதன் அடிப்படையில் கடந்த 14 ஆம் தேதி காலை கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 2,100 கனஅடி வீதம் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. கிருஷ்ணா நதி நீர் நேற்று காலை தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டுக்கு வந்தடைந்தது. அப்போது தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர், மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் கிருஷ்ணா நதி நீரை மலர்தூவி வரவேற்றனர். இந்த கிருஷ்ணா நதி நீர் இன்று (வியாழக்கிழமை) காலை பூண்டி ஏரியை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News