Kathir News
Begin typing your search above and press return to search.

'கொரோனவால் ஒரு உயிரிழப்பு கூட இல்லை என்ற நிலையில் தான் கோயில்கள் திறக்கப்படும்' : அமைச்சர் சேகர்பாபு!

கொரோனவால் ஒரு உயிரிழப்பு கூட இல்லை என்ற நிலையில் தான் கோயில்கள் திறக்கப்படும் : அமைச்சர் சேகர்பாபு!
X

ParthasarathyBy : Parthasarathy

  |  18 Jun 2021 8:56 AM GMT

தமிழகத்தின் ஹிந்து சமய அறநிலை துறை அமைச்சர் பல கோவில்களில் ஆய்வு பணியை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பால் ஒரு உயிரிழப்பு கூட இல்லை என்ற நிலை எப்போது வருகிறதோ அப்போது கோயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று கூறினார்.


இன்று மீனாட்சி அம்மன் கோயிலில் ஆய்வு மேற்கொண்ட சேகர்பாபு கோவில் யானை பார்வதிக்கு தாய்லாந்து கண் மருத்துவர்கள் மூலம் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும், மீனாட்சி அம்மன் கோவிலில் அடுத்தாண்டு நடைபெற உள்ள குடமுழுக்கு குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார்.

அதன் பின் அமைச்சர் சேகர் பாபு நிருபர்களிடம் கூறும்போது "தமிழகத்தில் கொரோனா தாக்கம் முற்றிலும் இல்லை என்ற நிலை எப்போது வருகிறதோ, அப்போது அனைத்து கோயில்களும் திறக்கப்பட்டு, பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்படும். சென்னையில் பத்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது வேகமாக பாதிப்பு குறைந்து வருகிறது. கோயில்களில் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படவில்லை. மற்றபடி அனைத்து பூஜைகளும் தடையின்றி நடந்து வருகிறது. பாதுகாப்பற்ற நிலை ஏற்படும் என்ற காரணத்தினால், கோயில் நகை பற்றிய விவரங்களை இணையதளத்தில் வெளியிட முடியாது. தீவிபத்தினால் சேதமடைந்த வீரவசந்தராயர் மண்டபம் விரைவில் புனரமைக்கப்படும்." என்று அவர் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News