கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சனைக்கு தீர்வு வழங்க கோவையில் சேவை மையம்!

By : Bharathi Latha
தமிழகத்தில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் தான் உள்ளது இருப்பினும் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய உடல்நலம் சார்பாகவும் மற்றும் மனநலம் சார்பாகவும் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்வு காணும் விதமாக தற்பொழுதும் கோவையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கான உளவியல் ஆலோசனைகள் வழங்கும் சேவை மையத்தை மாவட்ட ஆட்சியர் சமீரன் அவர்கள் இன்று துவக்கி வைத்தார்.
குறிப்பாக சமுதாயத்தைப் பொறுத்த வரையில், கொரோனா வைரஸ் தொற்று உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களை சமுதாயம் ஒதுக்கி வைக்கக் கூடாது என்று பல தரப்பினரும் வலியுறுத்தியதோடு, அது தொடர்பான விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தியுள்ளனர். இதனால் பாதிப்புக்கு உள்ளானவர்களை ஒதுக்கி வைக்கும் வழக்கம் குறைந்த போயுள்ளது. ஆனாலும், மன ரீதியான பாதிப்புகளை தொற்று பாதிப்புக்கு உள்ளனவர்களும், பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களும் சந்தித்து வருகின்றனர்.
இத்தகைய சூழலில், அவர்களுக்கு உளவியல் ஆலோசனைகளை வழங்க சிறப்பு சேவை மையம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து துவங்கப்பட்டுள்ளது. இதனை ஆட்சியர் சமீரன் இன்று துவக்கி வைத்தார். உளவியல் ரீதியான இலவச ஆலோசனைகளை பெற இலவச தொலைபேசி எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன இவற்றைப் பயன்படுத்தி எங்கள் வீட்டில் இருந்து உங்களுக்கு தேவையான தகவல்களை பெறமுடியும். மேலும் தகவல்களுக்கு, 0422-2201825, 2201826,2201828 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.
