Kathir News
Begin typing your search above and press return to search.

கல்வி தொலைக்காட்சியை பாருங்கள்: வீதி, வீதியாக தண்டோரா அடித்து மாணவர்களுக்கு ஊக்கப்படுத்தும் தலைமை ஆசிரியர்.!

கல்வி தொலைக்காட்சியை பாருங்கள்: வீதி, வீதியாக தண்டோரா அடித்து மாணவர்களுக்கு ஊக்கப்படுத்தும் தலைமை ஆசிரியர்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  26 Jun 2021 3:45 PM IST

திருச்சியில் அரசு உதவி பெறும் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருவர் கல்வி தொலைக்காட்சியை மாணவர்கள் பார்க்க வலியுறுத்தி வீதி, வீதியாக தண்டோரா அடித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள உப்பிலியபுரம் ஒன்றியம் வெங்கடாசலபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது அரசு உதவி பெறும் பள்ளி. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக இருப்பவர் ரவிச்சந்திரன். இதனிடையே கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலமாக வகுப்புகள் நடைபெற்று வருகிறது.





இந்நிலையில், மாணவர்கள் அனைவரும் கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்களை கவனிக்க வலியுறுத்தி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் வீதி, வீதியாக தண்டோரா அடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும், பல இடங்களில் மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சியை பெற்றோர்கள் வைப்பது இல்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதனை எல்லாம் போக்க வேண்டும் என்பதற்காக ஆசிரியர் நேராக வீடு தேடி சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.




ஆசிரியர் சேவையை அனைத்து தரப்பு மக்களும் பாராட்டி வருகின்றனர். சில இடங்களில் பள்ளிக்கு வருவதற்கே பல ஆசிரியர்கள் தயங்கும் நிலையில், நேராக மாணவர்கள் வசிக்கும் பகுதிகளிலேயே சென்று தலைமை ஆசிரியர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News