'அப்படித்தான் மணல் அள்ளுவோம்' : பா.ஜ.க நிர்வாகி மீது தாக்குதலில் ஈடுபட்ட தி.மு.க பிரமுகர்!

By : Muruganandham
திண்டுக்கல்லில் உள்ளூர் திமுக பிரமுகரால் பாஜக செயற்பாட்டாளர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மேற்கு பகுதியை சேர்ந்த பாஜக செயற்பாட்டாளரான வரதராஜன், தனது சுற்றுப்புறத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு நடைபெற்று வருவதை உள்ளூர் மக்கள் மூலம் அறிந்து கொண்டார். தகவல் கிடைத்ததும், அவர் அந்த இடத்திற்கு விரைந்து சென்றபோது, சட்டவிரோத மணல் தோண்டி எடுக்கும் செயலில் ஈடுபட்டிருப்பது உள்ளூர் திமுக பிரமுகர் தான் என்பதைக் கண்டறிந்தார். அவர்களைத் தடுக்க முயன்ற வரதராஜனை, ஒரு கும்பல் கடுமையாக தாக்கியது.
தற்போது வரதராஜன் படுகாயமடைந்து சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். திண்டுக்கல்லில் சட்டவிரோத மணல் அகழ்வை தடுத்து நிறுத்த முயன்ற பாஜக செயல்பாட்டாளர் மீது, திமுக பிரமுகர் நடத்திய தாக்குதலை உள்ளூர் பாஜக தலைவர்களும், பல மூத்த தலைவர்களும் கண்டித்தனர்.
ஊடக அறிக்கைகளின் அடிப்படையில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சில நாட்களுக்கு முன்பு மணல் குவாரி ஒப்பந்தத்தை சேகர் ரெட்டி மற்றும் அவரது உதவியாளர்களுக்கு வழங்கியதாக விமர்சிக்கப்பட்டார். திமுக அரசு ஆட்சிக்கு வந்தபின் சட்டவிரோத மணல் அகழ்வு தடையின்றி நடந்து வருவதாக பாஜக மாநில துணைத் தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
