தமிழகத்தில் குறைந்தது கொரோனா உயிரிழப்புகள்: மக்களின் ஒத்துழைப்பே காரணம்!

By : Bharathi Latha
இந்தியாவில் இரண்டாவது அலை கொரோனா தற்போது வெகுவாக குறைந்து வரும் நிலையில், சில மாநிலங்களில் மட்டும்தான் இன்னும் பாதிப்புகள் அதிகமாக இருந்து வருகின்றன. மத்திய அரசாங்கமும் தன்னுடைய நடவடிக்கைகள் மூலமாக தொற்று நோயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு முயற்சிகளை எடுத்துக் கொண்டு வருகின்றார்கள். அந்த வகையில் தமிழ்நாட்டில், பாதிப்புகள் முன்பு அதிகமாக இருந்தனர் இந்த நோய் தொற்றினால் தினமும் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் சற்று அதிகமாகவே இருந்து வந்தது. இதன் காரணமாக கடுமையான ஊரடங்கு முன்பு அமலில் இருந்தன.
ஆனால் தற்போது மக்களின் முழு ஒத்துழைப்புடன் காரணமாக பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை தமிழகத்தில் குறையத் தொடங்கியதும், இதன் காரணமாக நிறைய மாவட்டங்களில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மேலும் 2,652 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 1,40,463 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 2,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 25,21,438 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் நேற்று உயிரிழப்பு பதிவாகாத நிலையில் இன்று 6 பேர் இறந்துள்ளனர். தமிழகத்தில் கோவை, கடலூர், ஈரோடு உட்பட சுமார் 20 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. அதாவது உயிரிழப்புகளின் எண்ணிக்கை 20 மாவட்டங்களில் பதிவு ஆகவில்லை. கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 31,819ஆக உள்ளது. கொரோனாவிலிருந்து, மேலும் 3,104 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 24,56,165 பேர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
