Kathir News
Begin typing your search above and press return to search.

ஆந்த்ராக்ஸ் நோய் காரணமாக யானை உயிரிழப்பு: மற்ற கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்.!

ஆந்த்ராக்ஸ் நோய் காரணமாக யானை உயிரிழப்பு: மற்ற கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்.!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  14 July 2021 6:45 PM IST

கோவை மாவட்டம் ஆனைகட்டி வனப்பகுதியில் சேம்புகரை என்ற இடத்தில் ஆந்த்ராக்ஸ் நோய் காரணமாக காட்டு யானை ஒன்று உயிரிழந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த யானையை வனத்துறையினர் பார்த்த போது வாய் பகுதிகளில் இருந்து ரத்தம் வெளியேறி இருந்தது. இது ஆந்த்ராக்ஸ் அறிகுறி என்பதால், யானையின் இரத்தம் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனைகள் யானைக்கு ஆந்த்ராக்ஸ் நோய் இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது.


எனவே கால்நடைகளுக்கு பொதுவாக வரக்கூடிய நோய்களில் ஒன்றாக ஆந்த்ராக்ஸ் நோய் உள்ளது. எனவே முன்கூட்டியே இவற்றுக்கு தடுப்பூசிகள் செலுத்துவது மூலமாக இந்த நோயை கட்டுப்படுத்த முடியும். எனவே இவற்றுக்கான நடவடிக்கையில் தற்போது அரசு அதிகாரிகள் களம் இறங்கியுள்ளார்கள். இதனிடையே ஆந்த்ராக்ஸ் தொற்றால் யானை உயிரிழந்தது குறித்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஆட்சியர் சமீரனுக்கு தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து சேம்புக்கரை வனப் பகுதியை சுற்றி எட்டு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள கால்நடைகளுக்கு தடுப்பூசி போட உத்தரவிடப்பட்டது. கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் பணிகளை துவங்கினர்.


இரண்டாம் கட்டமாக ஜம்புகண்டி பகுதியில் இன்று 150 தடுப்பூசிகள் மாடு மற்றும் செம்மறி ஆடுகளுக்கு போடப்பட்டது. தொடர்ச்சியாக யானை இறந்து இருந்த இடத்தை சுற்றி இருக்கக் கூடிய மற்ற கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு தடுப்பூசி கூடுவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. எனவே அங்கு இருக்கக்கூடிய கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுவதன் மூலமாக அவைகளின் உயிர் இழப்பு தடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News