Kathir News
Begin typing your search above and press return to search.

ரஷ்யாவின் விண்வெளி பயிற்சிக்கு தேர்வான தமிழக அரசுப் பள்ளி மாணவிகள்!

ரஷ்யாவின் விண்வெளி பயிற்சிக்கு தேர்வான தமிழக அரசுப் பள்ளி மாணவிகள்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  18 July 2021 6:48 PM IST

அரியலுார் மாவட்டம் அரசுப் பள்ளியைச் சேர்ந்த தமிழக மாணவர்கள் தற்போது ரஷ்யாவில் நடைபெற இருக்கும் விண்வெளி பயிற்சிக்கு தேர்வாகியுள்ளார். அரியலூர் மாவட்டம் திருமானூர் அரசு மேல்நிலைபள்ளியில் 11ம் வகுப்பு படித்து வரும் ரகசியா, வேதாஶ்ரீ தான் அந்த மாணவிகள். இவர்கள் சென்னையை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தின் சார்பாக 2021 ஆம் ஆண்டுக்கான உலக அளவிலான வானவியல் ஆராய்ச்சிகள் தொடர்பான போட்டி நடந்தது. இப்போட்டியில் பங்கேற்று முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்கள் ரஷ்யாவில் நடக்கும் விண்வெளி பயிற்சிக்கு அழைத்துச் செல்லப்படுவர் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.


இந்த அறிவிப்பை தொடர்ந்து, இவர்களது அறிவியல் ஆர்வத்தை புரிந்து கொண்ட பள்ளி தலைமையாசிரியர் இன்பராணி சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தின் சார்பில் 2021 ஆம் ஆண்டிற்கான உலக அளவிலான வானவியல் ஆராய்ச்சி தொடர்பான போட்டிக்கு இவர்களை விண்ணப்பிக்க சொல்லியுள்ளார். சுமார் 2000 பேர் பங்கேற்றுள்ள இப்போட்டி 7 கட்டமாக நடத்தபட உள்ளது. இந்நிலையில் முதற்கட்டமாக நடந்த தேர்வில் அரியலூர் மாவட்டம் திருமானூரை சேர்ந்த ரகசியா மற்றும் வேதாஶ்ரீ தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனையறிந்த பள்ளிகல்வி துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி சென்னைக்கு அழைத்து அண்மையில் விருது வழங்கி தனது பாராட்டுக்களை தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இதுபற்றி அரசு பள்ளி மாணவிகளிடம் கேட்டபோது இது எங்களுக்கு சந்தோஷமாக இருப்பதாகவும், நாசாவில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை உள்ளதாகவும், அதற்கான முதற்படியாக இதை பயன்படுத்தி கொள்வோம் என தெரிவித்தனர். அரசுப் பள்ளிகள் படித்திருந்தாலும் அறிவியல் மீது உள்ள ஆர்வத்தின் காரணமாக இவர்கள் முதல்கட்ட தேர்வு வென்றெடுப்பது அரியலூர் மாவட்டத்தை பெருமை அடைய செய்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News