புடிச்சாலும் புளியங்கொம்பாத்தான் பிடிச்சிருக்காங்க - கொத்தி தூக்கிய புது வரவுகளுக்கு பதவி தீனி போடும் தி.மு.க!

By : Muruganandham
மக்கள் நீதி மையத்திலிருந்து விலகி தி.மு.க-வில் இணைந்த மகேந்திரனுக்கு முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. முன்னதாக மகேந்திரன் மக்கள் நீதி மையம் கட்சியில் துணைத்தலைவராக பதவி வகித்து வந்தார்.
கோவையை சேர்ந்த இவர், 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், 2021 -ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் மக்கள் நீதி மையத்தின் சார்பில் போட்டியிட்டவர். தேர்தலில் வெற்றியை சந்திக்காவிட்டாலும் அப்பகுதியில் மக்கள் செல்வாக்கு மிக்கவர்.
சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு மக்கள் நீதி மையத்திலிருந்து வெளியேறினார். பிறகு தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க-வில் தன்னை இணைத்துக் கொண்டார்.
தற்போது மகேந்திரனுக்கு தி.மு.க-வில் அதிகாரமிக்க முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. நிதித்துறை அமைச்சராக இருக்கும் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு கூடுதல் பொறுப்பு இருப்பதால், அவரது பணியை குறைக்கும் வண்ணம் மகேந்திரனுக்கு அவர் துறை சார்ந்த சில பொறுப்புகள் வழங்கப்படும் என தெரிய வந்துள்ளது.
ஏற்கனவே மகேந்திரன் முன்பே தி.மு.க-வில் இணைந்திருந்தால், கொங்கு பகுதியில் தி.மு.க வெற்றி பெற்றிருக்கும் என ஸ்டாலின் ஒரு முறை கூறியிருந்தார். அப்போதே, மகேந்திரனுக்கு முக்கிய பதவி வழங்கப்படலாம் என்பது உறுதியான நிலையில், அதனை மெய்பிக்கும் விதமாக இந்த தகவல் பரவி வருகிறது.
