Kathir News
Begin typing your search above and press return to search.

ஹிந்து கடவுள், பிரதமர் மோடி குறித்து கீழ்த்தரமாக பேசிய பாதிரியார் கைது!

ஹிந்து கடவுள், பிரதமர் மோடி குறித்து கீழ்த்தரமாக பேசிய பாதிரியார் கைது!

ParthasarathyBy : Parthasarathy

  |  24 July 2021 9:26 AM GMT

சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் நடந்த ஆர்பாட்டத்தில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கலந்துக் கொண்டார். அப்போது அந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் நமது பாரத தாய், ஹிந்து கடவுள்கள், அமைச்சர்கள், பாரத பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் குறித்து மிகவும் கீழ்தரமாகவும், அவமதிக்கும் வகையிலும் பேசி இருந்தார். அவரது இந்த பேச்சை கேட்டு பலர் கண்டனத்தை தெரிவித்து வந்த நிலையில் காவல் துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.


பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசுகையில் "பாரத தாயின் மேல் இருக்கும் அசிங்கம், சாக்கடை எங்கள் மீது வர கூடாது என்பதற்காக தான் நாங்கள் பாரத தாய் மீது செருப்பு போட்டு நடக்கிறோம். அமைச்சர் சேகர் பாபு இன்று பல கோயில்களுக்கு சென்று வழிபடுகிறார், அவருக்கு நாங்கள் ஒன்று கூறுகிறோம் நீங்கள் எத்தனை கோயில்களுக்கு சென்றாலும் தி.மு.க கட்சி இன்றைக்கு ஆட்சிக்கு வந்தது நாங்கள் அவர்களுக்கு போட்ட 'பிச்சை' என்பது அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா அவர்களின் கடைசி காலம் கவலைகிடமாக இருக்கும், மேலும் அவர்களுது உடலை நாய், புழுக்கள் சாப்பிடுகின்ற காலம் வரும்." என்று மிகவும் கீழ்தரமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் அவர் பேசியுள்ளார்.


இதனை அடுத்து அந்த பாதிரியாரின் இந்த அருவருக்கத்தக்க பேச்சு சமூக வலைத்தளத்தில் மிகவும் வேகமாக பரவி வந்தது. மேலும் அவரது இந்த பேச்சை கேட்ட பல மக்கள் மற்றும் பா.ஜ.க கட்சி பிரமுகர்கள் பெரும் கண்டனங்கள் தெரிவித்து, அவரை கைது செய்யும் படி குரல் எழுப்பினார். மேலும் பா.ஜ.க கட்சியை சேர்ந்த அஸ்வத்தாமன் பாதிரியார் மீது காவல் துறையிடம் புகார் அளித்து வழக்கு பதிவு செய்தார்.

இந்த நிலையில் பாதிரியார் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டனர். தன்னை கைது செய்ய போவதாக தகவல் வந்தவுடன் ஜார்ஜ் பொன்னையா தப்பி சென்று தலைமறைவு ஆகி விட்டார்.


இவ்வாறு இருக்கையில் சென்னைக்கு காரில் 4 பேருடன் அந்த பாதிரியார் தப்பி செல்கிறார் என்ற தகவல் காவல் துறைக்கு கிடைத்தது. இதனை தொடர்ந்து மதுரை கருப்பாயூரணி அருகே சோதனை நடத்திய போது ஒரு காரில் பாதிரியார் இருப்பது தெரியவந்தது. பின்னர் அந்த பாதிரியாரை காவல் துறையினர் கைது செய்து, கோவில்பட்டி DSP உதயசூரியனிடம் ஒப்படைத்தனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News