Kathir News
Begin typing your search above and press return to search.

கம்யூனிஸ்ட், திராவிட கட்சிகள் அரசியல் நடத்த பந்த் அறிவித்தது ஜனநாயக விரோதமானது - இந்து வியாபாரிகள் நல சங்கம் பதிலடி!

மத்திய அரசை எதிர்த்து இன்று (செப்டம்பர் 27) தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் பந்த் அறிவித்துள்ளனர். இதில் இந்து வியாபாரிகள் நல சங்கம் பங்கேற்காது என்று அதன் மாநிலத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.

கம்யூனிஸ்ட், திராவிட கட்சிகள் அரசியல் நடத்த பந்த் அறிவித்தது ஜனநாயக விரோதமானது - இந்து வியாபாரிகள் நல சங்கம் பதிலடி!
X

ThangaveluBy : Thangavelu

  |  27 Sep 2021 6:25 AM GMT

மத்திய அரசை எதிர்த்து இன்று (செப்டம்பர் 27) தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் பந்த் அறிவித்துள்ளனர். இதில் இந்து வியாபாரிகள் நல சங்கம் பங்கேற்காது என்று அதன் மாநிலத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள் பத்திரிகை செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது: கம்யூனிஸ்ட் கட்சியினர் வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்துள்ள பந்தில் இந்து வியாபாரிகள் நல சங்கம் கலந்து கொள்ளாது. வழக்கம் போல் கடைகள் திறந்திருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

கம்யூனிஸ்ட் கட்சியின் இன்று (செப்டம்பர் 27ம் தேதி) அறிவித்துள்ள பந்த் மக்கள் விரோதமானது. இதனை காரணம் காட்டி வியாபாரிகள் சங்கம் சில கடைகளை அடைக்க கூறி வற்புறுத்துவதாக தெரிகிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். காவல்துறை மக்களை அச்சுறுத்தி செய்யும் இது போன்ற கடையடைப்பை தடுக்க வேண்டும். இது ஜனநாயக விரோதமானது. இந்த கடையடைப்பில் இந்து வியாபாரிகள் நல சங்கம் கலந்து கொள்ளாது. எங்கள் சங்கத்தின் கடைகள் வழக்கமாக திறந்து வியாபாரம் நடைபெறும். கொரோனா ஊரடங்கால் ஒட்டுமொத்த உலகமே முடங்கி அல்லல் பட்டது.


இந்நிலையில் போர்கால அடிப்படையில் தடுப்பூசி போட்டு, நோய் தொற்றை கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. தேவையான அளவு தடுப்பூசியை மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக அனுப்பி வருகிறது.

இதே தடுப்பூசிக்கு எதிராகவும், மக்களை குழப்பும் வகையிலும் கருத்துக்களைக் கூறியது கம்யூனிச, திராவிட அமைப்புகள் தான் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதுவே, முதலிலேயே மத்திய அரசுடன் ஒத்துழைத்திருந்தால் இன்னும் சில மாதங்களுக்கு முன்னரே கூட நோய் தொற்று குறைந்து, மாநிலம் சகஜ நிலைக்கு திரும்பியிருக்கும்.


பண்டிகை காலம் ஆர்பிக்கும் நேரத்தில் இதுபோன்ற பந்த் அறிவிப்பது ஒவ்வொரு சமயத்திலும் இடதுசாரிகளால் நடத்தப்படும் நாடகம். இதனால் மக்களும், வியாபாரிகளும் இன்னலுக்கு உள்ளாவார்கள். இவர்கள் அரசியல் நடத்த மக்களை இம்சிப்பது ஜனநாயக விரோதமானது.

சில மாவட்டங்களில் ஆட்டோவில் (இன்று) பந்த் பற்றிய அறிவிப்பு செய்வதாக தகவல் தெரிகிறது. மக்களை அச்சுறுத்தும் ஜனநாயக விரோத போக்கை காவல்துறை தடுக்க வேண்டும். எனவே, 27.09.2021 அன்று அறிவித்துள்ள பாரத் பந்தில் இந்து வியாபாரிகள் நல சங்கம் கலந்து கொள்ளாது. வழக்கம் போல் எங்களது உறுப்பினர்களின் கடைகள் திறந்து வியாபாரம் நடத்துவோம். வியாபாரிகளுக்குத் தக்க பாதுகாப்பும், ஒத்துழைப்பும் காவல்துறையும், தமிழக அரசும் வழங்கும் என நம்புகிறோம். நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Hindu Munnani

Next Story
கதிர் தொகுப்பு
Trending News