Kathir News
Begin typing your search above and press return to search.

கோயில் சொத்தை விலை கொடுக்க முடியாது: உயர்நீதிமன்றம் அதிரடி!

பொருளாதார வளர்ச்சி என்பது முக்கியம் என்றாலும் அதற்காக கடவுளின் சொத்துக்களை விலை கொடுக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

கோயில் சொத்தை விலை கொடுக்க முடியாது: உயர்நீதிமன்றம் அதிரடி!

ThangaveluBy : Thangavelu

  |  7 Dec 2021 1:26 PM GMT

பொருளாதார வளர்ச்சி என்பது முக்கியம் என்றாலும் அதற்காக கடவுளின் சொத்துக்களை விலை கொடுக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. சென்னையில் உள்ள மெர்மெய்ட் பிராப்பர்ட்டீஸ் நிறுவனத்தின் இயக்குனர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்போரூர் தாலுகாவிற்குட்பட்ட திருவிடந்தையில் எங்கள் நிறுவனத்துக்கு சொந்தமாக 21 ஏக்கர் நிலம் இருக்கிறது. இதன் அருகாமையில் நித்ய கல்யாண பெருமாள் கோயிலுக்கு சொந்தமான 0.31 சென்ட் நிலமும் இருக்கிறது.

எனவே எங்களுடைய நிலத்துக்கும், ஈசிஆர் சாலைக்கும் இடையே கோயில் நிலம் அமைந்துள்ளது. இதனால் நேரடியாக ஈசிஆர் சாலையை அணுகுவதற்கு இந்த நிலம் உபயோகப்படுகிறது. இதன் காரணமாக 22 சென்ட் நிலத்தை குத்தகைக்கு அளிக்கக்கோரி விண்ணப்பம் செய்திருந்தோம்.

இதன் காரணமாக மாதம் ரூ.7 ஆயிரம் வாடகையில், 400 சதுர அடி இடத்தை 3 வருடங்களுக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டிருந்தார். அதனை ரத்து செய்து 22 சென்ட் நிலத்தை குத்தகையாக வழங்க, அறநிலையத்துறை செயலருக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source: Dinamalar

Image Courtesy:Times Of India


Next Story
கதிர் தொகுப்பு
Trending News