ஹெலிகாப்டர் விபத்தின்போது மீட்பு பணியில் உதவிய கிராம மக்களுக்கு நிவாரணம் வழங்கிய இந்திய ராணுவம்!
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி நஞ்சப்ப சத்திரம் என்ற வனப்பகுதியில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி மதுலிகா ராவத், ராணுவ உயர் அதிகாரிகள் உயிரிழந்தனர். ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தபோது நஞ்சப்ப சத்திரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் தண்ணீர் மற்றும் போர்வைகள் கொடுத்து மீட்பு பணிகளுக்கு பெரிதும் உதவினர்.
By : Thangavelu

அவர்களை கவுரவிக்கும் வகையில் இந்திய விமானப்படையின் ஏர் மார்சல் சஞ்சீவ் ராஜ் மீட்பு பணியில் ஈடுபட்ட கிராமத்தினரை பாராட்டி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: 08.12.2021 அன்று பகல் 12.15 மணியளவில் தங்கள் கிராமத்தின் அருகில் எதிர்பாராமல் நடந்த துயர சம்பவமான விமான விபத்தின் போது தாங்களும் தங்கள் ஊர்பொதுமக்களும் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் செய்த அனைத்து உதவிகளுக்கும் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரி, வெலிங்டன் மற்றும் இந்திய விமானப்படையின் சார்பாகவும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் மற்றும் தங்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே அப்பகுதி மக்களுக்கு அரிசி, காய்கறி, போர்வை உள்ளிட்டவைகளை ராணுவ வீரர்களுடன் சென்று விமானப்படை துணை மார்ஷல் சஞ்சீவ் ராஜ் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Twiter