Kathir News
Begin typing your search above and press return to search.

கோயில்களில் அறங்காவலர்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள் ?உயர்நீதிமன்றம் போட்ட புதிய உத்தரவு!

தமிழகத்தில் உள்ள கோயில்களை இந்து சமய அறநிலையத்துறை நிர்வகித்து வருகிறது. அது போன்ற கோயில்களில் ஆளும் தரப்பு தங்களுக்கு சாதகமானவர்களை தேர்வு செய்து அறங்காவலர் குழுத் தலைவராக நியமித்து வருகின்றது. அது போன்ற நியமனங்களில் சரியாக எந்த நடைமுறையும் பின்பற்றவில்லை என்று சில பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

கோயில்களில் அறங்காவலர்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள் ?உயர்நீதிமன்றம் போட்ட புதிய உத்தரவு!
X

ThangaveluBy : Thangavelu

  |  15 Dec 2021 4:29 AM GMT

தமிழகத்தில் உள்ள கோயில்களை இந்து சமய அறநிலையத்துறை நிர்வகித்து வருகிறது. அது போன்ற கோயில்களில் ஆளும் தரப்பு தங்களுக்கு சாதகமானவர்களை தேர்வு செய்து அறங்காவலர் குழுத் தலைவராக நியமித்து வருகின்றது. அது போன்ற நியமனங்களில் சரியாக எந்த நடைமுறையும் பின்பற்றவில்லை என்று சில பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமிப்பதற்கான அறிவிப்பை தமிழக அறநிலையத்துறை வெளியிட்டது. ஆணவங்களில் போதிய விபரங்கள் இல்லை. பல்வேறு கோயில்களும் முறையாக பராமரிக்கப்படவில்லை. மேலும், கோயில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என்றால் மிகவும் திறவை வாய்ந்தவர்களை அறங்காவலர்களாக நியமிப்பது அவசியம். வெறும் கண்து¬ப்பிற்காக சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதிலும் அறங்காவலர் குழுவில் இடம்பெறுபவர்கள் தங்களில் எந்த மத சம்பிரதாயத்தை பின்பற்றுகிறார் என்ற விவரங்களும் குறிப்பிடுவது மிகவும் அவசியம். இதில் அரசியலில் ஈடுபடுவர் இருக்கக் கூடாது. இதில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை பின்பற்றவில்லை என விண்ணப்பதாரர்கள் குற்றச்சாட்டை முன்வைத்ததாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, பி.வேல்முருகன் அமர்வு முன்பு வந்தது. அறங்காவல் குழுவில் எத்தகைய மாற்றங்கள் தரப்பு கோருகிறதோ அதனை தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் வருகின்ற டிசம்பர் 17க்குள் சமர்ப்பிக்க வேண்டும். அந்த விபரங்களை அரசுக்கு கொண்டு செல்ல வேண்டும். மேலும், விண்ணப்பத்தில் எத்தகைய விபரங்கள் இடம்பெறுவது, எதனை நீக்க செய்ய வேண்டும் என்பன விபரங்கள் பற்றி அரசு விரைவில் முடிவெடுக்க வேண்டும். இந்த விசாரணை டிசம்பர் 22ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

Source: Dinamalar

Image Courtesy:Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News