கோயில் இடத்துக்கு கிரயம் செய்திருந்தால் செல்லாது!
கோயில் நிலங்களை வாங்கவோ அல்லது விற்கவோ முடியாது. எத்தனை கிரயம் மற்றும் பத்திரப்பதிவு செய்திருந்தாலும் எதுவுமே செல்லுபடியாகாது.
By : Thangavelu
சேலம் மாவட்டம், இடைப்பாடி கச்சுப்பள்ளி, செல்லியாண்டி அம்மன் கோயிலுக்கு 37 ஏக்கர் நிலமும், புதுப்பாளையம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலுக்கு சொந்தமாக 9.5 ஏக்கர் நிலமும் உள்ளது. அந்த நிலங்கள் அனைத்தும் கடந்த 2016ம் ஆண்டு நீதிமன்றம் மூலம் ஆய்வு செய்யப்பட்டு அளவீடு செய்து கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த நிலங்கள் அனைத்தும் தனி நபர்கள் பராமரிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலங்கள் பற்றி திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் நேற்று (டிசம்பர் 14) ஆய்வுகளை மேற்கொண்டார். முன்னர் எடப்பாடி தாலுகா அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் ஒன்றும் நடைபெற்றது. இந்த ஆலோசனையில் சங்ககிரி ஆர்.டி.ஓ., வேடியப்பன், தாசில்தார் விமல்பிரகாசம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதன் பின்னர் கோயில் நிலங்கள் இருக்கின்ற இடங்களில் ஆய்வுகளை மேற்கொண்டார் ராதாகிருஷ்ணன்.
அதனை முடித்துக்கொண்ட அவர் செய்தியாளர்களை சந்தித்தார். கோயில் நிலங்களை வாங்கவோ அல்லது விற்கவோ முடியாது. எத்தனை கிரயம் மற்றும் பத்திரப்பதிவு செய்திருந்தாலும் எதுவுமே செல்லுபடியாகாது. கோயில் நிலங்கள் குறித்து யார் வேண்டுமானாலும் அறநிலைத்துறையிடம் புகார் அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
Source: Dinamalar
Image Courtesy: Indian Panorama