பார்வை இழந்த சேரனுக்கு மீண்டும் பார்வை: மகிழ்ச்சியில் மருத்துவர்கள், வன ஊழியர்கள்!
நீலகிரி மாவட்டம், முதுமலையில் இரண்டு கண்களிலும் பார்வை இழந்த வளர்ப்பு யானையான சேரனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் ஒரு கண்ணில் பார்வை வந்ததால், மருத்துவர்கள் மற்றும் வன ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
By : Thangavelu

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் வளர்ந்து வரும் கும்கி யானையான சேரனுக்கு பல வருடங்களாக வலது கண்ணில் பார்வை இல்லாமல் இருந்துள்ளது. அதே சமயத்தில் கடந்த ஜூன் மாதம் பாகன் சேரனை தாக்கியதால் இடது கண்ணிலும் பார்வை பறிபோயுள்ளது. பாகன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர்கள் சேரனுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். தொடர் சிகிச்சை காரணமாக மீண்டும் இடது கண்ணில் பார்வை கிடைத்தது. இதனால் தனது அன்றாட பணிகளை மீண்டும் சேரன் யானை செய்யத் துவங்கியுள்ளது. மீண்டும் சேரனுக்கு பார்வை கிடைத்ததால் வன ஊழியர்கள் மட்டுமின்றி கால்நடை மருத்துவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீண்ட நாட்களுக்கு பின்னர் பார்வை கிடைத்ததால் சேரன் அங்கும், இங்கும் துள்ளிக்குதித்து விளையாடி வருவதையும் காண முடிகிறது.
Source, Image Courtesy: Dinamalar