Kathir News
Begin typing your search above and press return to search.

ஆன்லைன் ரம்மியால் கடனாளியாகி மனைவி, குழந்தைகளை கொன்றுவிட்டு வங்கி அதிகாரி தற்கொலை!

சென்னை, பெருங்குடியில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கொன்று விட்டு வங்கி அதிகாரி மணிகண்டன் என்பவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் ரம்மியால் கடனாளியாகி மனைவி, குழந்தைகளை கொன்றுவிட்டு வங்கி அதிகாரி தற்கொலை!

ThangaveluBy : Thangavelu

  |  3 Jan 2022 5:26 AM GMT

சென்னை, பெருங்குடியில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கொன்று விட்டு வங்கி அதிகாரி மணிகண்டன் என்பவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, பெருங்குடியில் ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் சொகுசாக வசித்து வந்தவர் மணிகண்டன் 36. இவர் போரூரில் உள்ள பன்னாட்டு வங்கியில் உயர் பொறுப்பு வகித்து வந்துள்ளார். இவருக்கு தாரா 35 என்ற மனைவியும், இரண்டு பிள்ளைகள் உண்டு. இவர்கள் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். இதனிடையே மணிகண்டன் ஆண்டுக்கு 28 லட்சம் ரூபாய் சம்பளம் பெற்று வந்துள்ளார்

இதனிடையே மணிகண்டன் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி இருந்துள்ளார். அதாவது அதிகமான பணத்தை ஆன்லைன் ரம்மி மூலம் இழந்துள்ளார். ஒரு கட்டத்தில் நண்பர்களிடமும் கடனாக பல லட்சம் ரூபாயை வாங்கி அதையும் ரம்மியில் இழந்துள்ளார். இது அவரது மனைவிக்கு தெரிய வரவே குடும்பத்தில் தகராறு நடந்ததாக கூறப்படுகிறது. அதே போன்று கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி மணிகண்டன் வீடு உள்பக்கமாக பூட்டிக்கிடந்துள்ளது. வீட்டில் இருந்து யாரும் வெளியில் வராமல் இருந்தால் அருகாமையில் உள்ளவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் பெருங்குடி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலை தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்பிக்கு சென்று மணிகண்டனின் வீட்டின் கதவை தட்டியுள்ளனர். ஆனால் எவ்வித பயனும் இல்லை.

இதனிடையே போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது தாராவும் அவரது குழந்தைகளும் சடலமாக கிடந்துள்ளனர். மணிகண்டனும் சமையல் அறையில் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் நான்கு பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மிகவும் அதிகமான சம்பளத்தில் வசியுடன் வாழந்து வந்த மணிகண்டன் சுற்று வட்டார பகுதிகளில் அதிகமான கடன்களை வாங்கியுள்ளார். அதனை திருப்பி தராமல் மிகவும் கஷ்டத்தில் வாழ்ந்து வந்துள்ளார். கடன் காரர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் மணிகண்டன் வேலைக்கு சரிவர போகாமல் இருந்து வந்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் தனது மனைவி தாராவை கிரிக்கெட் மட்டையால் தலையில் அடித்து கொலை செய்துள்ளார். இதன் பின்னர் குழந்தைகளையும் கழுதை நெரித்து கொன்று விட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சூதாட்டம் காரணமா அல்லது கடனா பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் அருகாமையில் இருப்பவர்கள் மணிகண்டன் ஆன்லைன் ரம்மி விளையாடுவது வழக்கம் என கூறி வருகின்றனர். கடந்த கால அதிமுக ஆட்சியில் தடை செய்யப்பட்ட ரம்மி விளையாட்டை திமுக அரசு மீண்டும் கொண்டு வந்துள்ளதால் மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டார் என நெட்டிசன்கள் கருத்தை வெளியிட்டு வருகின்றனர்.

Source: Samayam

Image Courtesy:One India Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News