அப்போ -நீட் போராளி! இப்போ -''இஸ்லாமிய விளம்பரதார்'' சபரிமாலாவின் நிலைமை இப்படியா ஆகனும்!
சபரிமாலா என்ற பொய்யான போராளி நீட் தேர்வு நடத்தக் கூடாது என்று மாணவர்கள் மற்றும் சமூதாயத்தில் போராட்டங்களை நடத்தி வந்தார். அது மட்டுமின்றி இவர் திமுகவுக்கு ஆதரவாக தனது ஆசிரியர் பணியை ராஜினாமா செய்துவிட்டு நீட் ஒழிப்பேன் என்று தமிழகத்தில் வலம் வந்தவர்களில் இவரும் ஒருவர் ஆவார்.

By : Thangavelu
சபரிமாலா என்ற பொய்யான போராளி நீட் தேர்வு நடத்தக் கூடாது என்று மாணவர்கள் மற்றும் சமூதாயத்தில் போராட்டங்களை நடத்தி வந்தார். அது மட்டுமின்றி இவர் திமுகவுக்கு ஆதரவாக தனது ஆசிரியர் பணியை ராஜினாமா செய்துவிட்டு நீட் ஒழிப்பேன் என்று தமிழகத்தில் வலம் வந்தவர்களில் இவரும் ஒருவர் ஆவார்.
இதனிடையே தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் பல நீட் போராளிகள் மற்றும் அரசுக்கு எதிராக போராடுபவர்கள் மறைந்துள்ளனர். அதில் தற்போது நீட் ஒழிப்பேன் என்று சபதம் எடுத்துக்கொண்டு தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்த சபரிமாலா தற்போது நீட் குறித்த பேசிவதில்லை.
சமூக வலைதளங்களில் இவனுக பேசுற சமத்துவம், சமூகநீதி, முற்போக்குதனம் எல்லாம் அரசியலுக்காகதான். மற்றபடி இன்னும் கிமு.2000தான் வாழ்ந்திட்டு இருக்காங்க. pic.twitter.com/SD0ZHOIcXv
— Munima (@MunimaOffl) January 2, 2022
இந்நிலையில், தற்போது சபரி மாலா ஒரு உருது கல்லூரிக்கு சென்றுள்ளார். அங்கு வகுப்பறையில் ஆண் ஆசிரியர் எப்படி பாடம் நடத்துகின்றார் என்ற விளக்கத்தையும் கொடுத்துள்ளார். அதில் பெண்களை பார்க்காமல் ஆண் ஆசிரியர் ஒரு அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொள்வார். அதன் பின்னர் அங்கு உள்ள கரும்பலகையில் எழுதி வெளியில் தள்ளி விட்டால், மாணவிகள் அதனை பார்த்து படித்துக்கொள்வார்கள் என்று கூறியுள்ளார். ஆண் ஆசிரியரை சைத்தான் எனவும் கூறியுள்ளார். அவர்கள் பெண்களிடம் தவறாக நடக்க வாய்ப்பு மிகவும் குறைவு என கூறியுள்ளார். இது போன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
சமுதாயத்தில் ஆசிரியர்கள் என்பவர்கள் கடவுளுக்கு சமமானவர்கள். ஏதோ ஒரு இடத்தில் நடக்கும் தவறுக்கு அனைத்து ஆண் ஆசிரியர்களையும் தவறாக பேசுவது சரியில்லை. இதனை சபரிமாலாவும் உணர வேண்டும். அதனை விட்டு இஸ்லாமியர்களின் மதத்தை பரப்புவதாக அவரது பேச்சுக்கள் அமைந்திருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Source: Twiter
Image Courtesy:Minnambalam
