குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து நடந்த பகுதியில் நினைவு தூண்: அளவீடு பணிகளில் ராணுவம்!
குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தில் ராணுவம் சார்பாக நினைவுத்தூண் கட்டுவதற்கான முதல் வேலையில் நிலம் அளவீடு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
By : Thangavelu
குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தில் ராணுவம் சார்பாக நினைவுத்தூண் கட்டுவதற்கான முதல் வேலையில் நிலம் அளவீடு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
கோவை, விமானப்படைத் தளத்தில் இருந்து இந்திய ராணுவத்தின் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மிதுலிகா ராவத், ராணுவ உயர் அதிகாரிகள் என 14 பேர் குன்னூர் ராணுவ பயிற்சி கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்க ஹெலிகாப்டர் மூலம் சென்றனர். அவர்கள் குன்னூர் சென்றபோது விபத்து நடந்தது. இதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். விமானி உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரும் உயிரிழந்தார். இந்த கோர விபத்து நாட்டையே உலுக்கியது.
இதனிடையே ஹெலிகாப்டர் விபத்து நடந்த பகுதியில் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் நினைவு தூண் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர். இதனால் நேற்று ராணுவத்தினர் சார்பில் நினைவு தூண் அமைப்பதற்காக நிலம் அளவீடு செய்யும் பணி துவங்கியது. நினைவு தூண் அமைக்கப்பட்டு ராணுவம் சார்பில் அஞ்சலி செலுத்தப்படும். சுற்றுலா பயணிகளும் அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதி அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. வனத்துறையின் அனுமதி கிடைத்தவுடன் கட்டுமான பணிகள் துவங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
Source, Image Courtesy: Dinamalar