பக்தரின் விடா முயற்சி ! ஒரு ஏக்கர் கோயில் நிலம் மீட்கப்பட்டதா?
கோவை அருகே அம்மன் கோயிலுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை பக்தர் ஒருவர் சட்டப்பூர்வமாக மீட்டுக் கொடுத்துள்ளார்.
By : Thangavelu
கோவை அருகே அம்மன் கோயிலுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை பக்தர் ஒருவர் சட்டப்பூர்வமாக மீட்டுக் கொடுத்துள்ளார்.
கோவை, மதுக்கரை தாலுகாவுக்கு உட்பட்டது செட்டிப்பாளையம், ஓராட்டுக்குப்பையில் மருதகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு 97 சென்ட் நிலம் இருந்துள்ளது. இதனை தனியார் சிலர் தங்களின் பெயர்களை முறைகேடாக பட்டா மாற்றம் செய்துள்ளனர். இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனிடையே சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் அங்கமுத்து கோவை ஆட்சியர் சமீரனிடம் ஒரு புகார் மனு அளித்துள்ளார். கோயிலுக்கு சொந்தமான நிலத்தை முறைகேடாக பட்டா மாற்றம் செய்துள்ளனர். அதனை மீட்டுக்கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ஆட்சியர் உத்தரவின் பேரில் வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். கோயிலுக்கு சொந்தமான நிலத்தை பட்டா மாற்றம் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதனிடையே ஆட்சியர் உத்தரவின் பேரில் மீண்டும் நிலத்தை கோயில் பெயரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பக்தர் முயற்சிக்கு அனைத்து தரப்பு மக்களும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
Source: Dinamalar
Image Courtesy:Nakkheeran