Kathir News
Begin typing your search above and press return to search.

அருணாசலேஸ்வரர் கோயிலில் நாயக்கர் கால ஓவியம் கண்டுபிடிப்பு! எவ்வளவு ஆண்டுகள் பழமையானது தெரியுமா ?

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் 400 ஆண்டுகள் மிகவும் பழமையான நாயக்கர் காலத்தில் வரையப்பட்ட ஓவியம் தற்போது கண்டுப்பிடிக்கப்பட்டிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அருணாசலேஸ்வரர் கோயிலில் நாயக்கர் கால ஓவியம் கண்டுபிடிப்பு! எவ்வளவு ஆண்டுகள் பழமையானது தெரியுமா ?

ThangaveluBy : Thangavelu

  |  7 Jan 2022 8:51 AM GMT

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் 400 ஆண்டுகள் மிகவும் பழமையான நாயக்கர் காலத்தில் வரையப்பட்ட ஓவியம் தற்போது கண்டுப்பிடிக்கப்பட்டிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருவண்ணாமலையில் மரபு சார் அமைப்பு தலைவரும், வரலாற்று ஆய்வாளருமான ராஜ்பன்னீர்செல்வம் தலைமையிலான குழு, அருணாசலேஸ்வரர் கோயில் தெற்கு பகுதி கோபுரத்தில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான நாக்கர் காலத்தின் ஓவியத்தை கண்டுபிடித்துள்ளனர்.

இது பற்றி ராஜ் பன்னீர்செல்வம் கூறும்போது: ஓவியத்தில் முருகன் மயில் மீது அமர்ந்து சதுர்புஜத்துடன் காட்சி தருகிறார். அவருக்கு வலது பக்கத்தில் வள்ளியும் இடப்பக்கம் தெய்வானையும் காட்சி அளிக்கின்றனர். இவை கந்தபுராணம் கூறும் முருகனின் 16 கோலங்களில் ஒன்று 'சிகிவாகனர்' என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஓவியம் 16ம் நூற்றாண்டின் கடை பகுதியான சேவப்ப நாயக்கர் காலத்தை ஒட்டியதாகும். சுமார் 400 ஆண்டு பழமையான ஓவியத்தை சிதைவிலிருந்து மீட்க வேண்டும். இதனை தமிழக தொல்லியல் துறையும், இந்து சமய அறநிலையத்துறையும் முறையாக பாதுகாத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News