Kathir News
Begin typing your search above and press return to search.

கீழ்கட்டளை ஏரி போக்கு கால்வாயில் ஆக்கிரமித்து கடடப்பட்ட சர்ச், குடியிருப்புகள் அகற்றுவது எப்போது?

கீழ்கட்டளை ஏரி போக்கு கால்வாயில் ஆக்கிரமித்து கடடப்பட்ட சர்ச், குடியிருப்புகள் அகற்றுவது எப்போது?

ThangaveluBy : Thangavelu

  |  17 Jan 2022 4:32 AM GMT

சென்னை மாநகரம் சிறிய அளவிலான மழை பெய்தால் கூட குடியிருப்புகளை சூழ்ந்து கொண்டுள்ளது. இதற்கு காரணம் மழைநீர் வெளியேறுவதற்கான வடிகால் வழிகளை ஆக்கிரமித்து பிராமண்ட கட்டடங்கள் மற்றும் வணிக வளாகங்கள், சர்ச் உள்ளிட்டவைகள் கட்டப்பட்டுள்ளதே என கூறப்படுகிறது.

இதனால் நீர் வழித்தடங்களை சீரமைப்பிற்காக பெரிய, பெரிய கட்டடங்கள் மற்றும் கோயில்கள் அகற்றப்பட்டு வந்த நிலையில், கீழ்கட்டளை நாராயணபுரம் ஏரியின் போக்கு கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சர்ச் மற்றும் குடியிருப்புகளை அகற்றுவது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் கீழ்கட்டளை ஏரி நிரம்பினால் அங்கு இருந்து வெளியேறும் உபரி நீர் பள்ளிக்கரணை, நாராயணபுரம் ஏரியில் சேர்ந்து, மீண்டும் அங்கிருந்து சதுப்பு நில பகுதிக்கு செல்கின்ற வகையில போக்கு கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் ஆவணப்படி சுமார் 4 கிலோ மீட்டர் நீளமும், 80 மீட்டர் அகலமும் உடையது.

ஆனால் தென்சென்னையில் உள்ள பெரும்பாலான ஏரிகளின் வரத்து முழுவதும் போக்கு கால்வாய்கள் பலரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கீழ்கட்டளையை சுற்றியுள்ள பல ஏரிகளின் உபரி நீர், கீழ்கட்டளை நாராயணபுரம் ஏரி வழியாக செல்வதற்கு வழித்தடம் ஏற்படுத்தப்பட்டது. அதே போன்று ஆக்கிரமிப்பு செய்த இடங்களை அகற்றவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது கீழ்கட்டளை நாராயணபுரம் ஏரிகளின் போக்கு கால்வாயில் இருக்கின்ற ஆக்கிரமிப்புகளையும் அகற்ற உத்தரவிடப்பட்டது. அதில் மடிப்பாக்கம் பகுதியில் கால்வாயை 30 அடி வரையில் ஆக்கிரமித்து சர்ச கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அருகாமையில் சில வீடுகளும் ஆக்கிரமித்தும் கட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக போக்கு கால்வாய் மிகவும் குறுகியே காணப்பட்டுள்ளது. ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளுக்கு தாசில்தார் படிவம் 1,2 வழங்கியுள்ளார். ஆனால் அப்போதும் இடங்களை காலி செய்யாமல் தொடர்ந்து தங்கியுள்ளனர். அவர்களுக்கு சில அரசியல் புள்ளிகளின் ஆதரவும் இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே பல இடங்களில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட இடங்கள் அகற்றப்பட்டும் போக்கு கால்வாயில் மட்டும் ஏன் இன்னும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை என்ற கேள்வியை பொதுமக்கள் எழுப்பியுள்ளனர்.

Source, Image Courtesy: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News