தொற்றுப் பரவ ஏதுவாக, கோவையில் ஊரடங்கு நேரத்தில் ஜெபக்கூட்டம்!
By : Dhivakar
கோவையில் ஊரடங்கு நேரத்தில் கட்டுப்பாடுகளை மீறி, தேவாலயம் அருகில் ஜெபக் கூட்டம் நடைபெற்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் ஞாயிற்றுக்கிழமையில் முழு பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து எந்தவித மத கூட்டங்களும் நடைபெற தடைவிதிக்கப்பட்டது.
கோயம்புத்தூரில், பீளமேடு நகரிலுள்ள, அன்னை வேளாங்கண்ணி மாதா தேவாலயத்திற்கு அருகில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி ஜெபக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஜெபக்கூட்டத்தால் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியதாக தெரிகிறது. இந்நிலையில் இந்து முன்னணி அமைப்பு காவல்துறை அதிகாரிகளுடன் நடக்கவிருந்த ஜெப கூட்டத்தை தடுத்து நிறுத்தியது.
இதுகுறித்து இந்து முன்னணி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவை பீளமேடு நகரில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி மாதா தேவாலயம் அருகில் சமுதாயக் கூடத்தில் ஊரடங்கு நேரத்தில் தடையை மீறி ஜெபக்கூட்டம்.இந்துமுன்னணியினர் காவல்துறை உதவியுடன் ஜெபக்கூட்டத்தை தடுத்து நிறுத்தினர்.