Kathir News
Begin typing your search above and press return to search.

மதமாற்றத்தால் உயிரிழந்த மாணவிக்கு நியாயம் கேட்டு இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் மாபெரும் ஆர்ப்பாட்டம்!

மதமாற்றத்தால் உயிரிழந்த மாணவிக்கு நியாயம் கேட்டு இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் மாபெரும் ஆர்ப்பாட்டம்!
X

ThangaveluBy : Thangavelu

  |  24 Jan 2022 2:23 PM

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவியை கிறிஸ்துவ மதத்திற்கு மாறுவதற்கு கட்டாயப்படுத்தியதால் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது மரண வாக்கு மூலம் ஒட்டு மொத்த இந்துக்களை கதிகலங்க செய்திருந்தது.

அதாவது கிறிஸ்தவ பள்ளியில் தன்னை மதமாற்றம் செய்ய வற்புறுத்தி பல்வேறு வகையில் தொந்தரவு அளித்தனர். நான் கடைசி வரைக்கும் இந்து மதத்திலேயே இருப்பேன் என்பதற்காக தனது உயிரையே மாய்த்துக்கொண்டார். இவரது மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.


அந்த வகையில் இன்று தமிழகத்தில் பல மாவட்டங்களில் இந்து முன்னணி சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. அதே போன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோயிலில் பிரமாண்டமான முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு திமுக அரசின் அலட்சியப்போக்குக்கு கண்டனங்களை தெரிவித்தனர்.


மதமாற்றத்தால் உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு உரிய நீதியை பெற்றுத்தருமாறு கோரிக்கை வைத்தனர். மேலும், உயிரிழந்த மாணவியின் ஆத்மா சாந்தியடைய நாளை நாகர்கோயில் பேருந்து நிலையம் எதிரில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News