Kathir News
Begin typing your search above and press return to search.

மயான சாலை ஆக்கிரமிப்பு: ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் சமையல் செய்யும் போராட்டம்!

மயானத்திற்கு செல்லும் சாலையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்திருப்பதை அகற்றி தராமல் இருக்கும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் குடிபுகுந்து சமையல் செய்து தங்களின் கண்டனத்தை தெரிவித்தனர்.

மயான சாலை ஆக்கிரமிப்பு: ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் சமையல் செய்யும் போராட்டம்!
X

ThangaveluBy : Thangavelu

  |  11 Feb 2022 9:39 AM IST

மயானத்திற்கு செல்லும் சாலையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்திருப்பதை அகற்றி தராமல் இருக்கும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் குடிபுகுந்து சமையல் செய்து தங்களின் கண்டனத்தை தெரிவித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் 9வது வார்டு, தேவேந்திர நகரில் 120க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் சாலையுடன் சேர்ந்து போக்குவரத்து சாலையையும் தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளார். இதனால் உயிரிழந்தவர்களை மயானத்திற்கு எடுத்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறினர். அங்கு ஆட்சியரை கண்டித்து போராட்டம் நடத்தியது மட்டுமின்றி சமையல் செய்து அங்கு நூதன முறையில் போராட்டம் நடத்தி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்த சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே கேணிக்கரை இன்ஸ்பெக்டர் மலைச்சாமி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் பின்னர் ஆட்சியர் சங்கர்லால் குமாவத்தை சந்தித்து கோரிக்கை மனுவை பொதுமக்கள் அளித்தனர்.

Source, Image Courtesy: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News