Kathir News
Begin typing your search above and press return to search.

பிஷப், பாதிரியார்களை சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.,! சூடுபிடிக்கும் மணல் கடத்தல் விவகாரம்!

நெல்லையில் மணல் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட கேரள கத்தோலிக்க பிஷப் மற்றும் பாதிரியார்களை தினந்தோறும் விஐபிக்கள் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஒருவரும் சந்தித்து சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிஷப், பாதிரியார்களை சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.,! சூடுபிடிக்கும் மணல் கடத்தல் விவகாரம்!

ThangaveluBy : Thangavelu

  |  11 Feb 2022 10:21 AM GMT

நெல்லையில் மணல் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட கேரள கத்தோலிக்க பிஷப் மற்றும் பாதிரியார்களை தினந்தோறும் விஐபிக்கள் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஒருவரும் சந்தித்து சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே பொட்டல் என்ற கிராமர் உள்ளது. அங்கு கடந்த 2019ம் ஆண்டு கேரளா மாநிலம், பத்தனம்திட்டா கத்தோலிக்க சபைக்கு சொந்தமான நிலத்தில் மனுவேல் ஜார்ஜ் என்பவர் 'எம் சாண்ட்' ஆலை நடத்தி வந்தார். அப்போது செயற்கை மணலுக்கு பதிலாக ஆற்று மணலை கடத்தி விற்பனை செய்து வந்துள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

அதாவது 27 ஆயிரம் கியூபிக் மீட்டர் ஆற்று மணல் கடத்தப்பட்டதாக உதவி ஆட்சியர் பிரதீக் தயாள் என்பவர் ஆய்வு மேற்கொண்டு ரூ.9.50 கோடி ரூபாய் அபராதமும் விதித்தார். இதனை தொடர்ந்து மணல் கடத்தல் விவகாரத்தில் ஈடுபட்டதாக சுமார் 20 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் மேலும் சில அரசியல் பிரமுகர்கள் சிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கை சிபிசிஐடி போலீசார் வழக்கை விசாரித்த நிலையில், கேரளாவை சேர்ந்த பிஷப் சாமுவேல் மார் இரோனஸ் மற்றும் 5 கத்தோலிக்க பாதிரியார்களையும் போலீசார் கைது செய்து நாங்குநேரி சிறையில் அடைத்துள்ளனர். இதில் பிஷப் சாமுவேல் மார் இரோனஸ் மற்றும் ஜோஸ் ஜாம காலா உள்ளிட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிஷப் மற்றும் பாதிரியாரை தினமும் விஐபிக்கள் சந்தித்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 9ம் தேதி நா£குநேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபி மனோகரன் கத்தோலிக்க சபையின் கன்னியாஸ்திரிகளை சந்தித்து பேசியுள்ளார். ஆனால் நீதிமன்றம் மற்றும் போலீசாரின் உரிய அனுமதியின்றி கைது செய்யப்பட்டவர்களை சந்தித்து பேசி வருவது மணல் கடத்தல் சம்பவத்தில் மேலும் பலர் சிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Source, Image Courtesy: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News