Kathir News
Begin typing your search above and press return to search.

இருளர் சமுதாய பெண் ஊராட்சி மன்ற தலைவரை, சாதிய ரீதியாக துன்புறுத்தும் தி.மு.க பிரமுகர்!

இருளர் சமுதாய பெண் ஊராட்சி மன்ற தலைவரை, சாதிய ரீதியாக துன்புறுத்தும் தி.மு.க பிரமுகர்!
X

DhivakarBy : Dhivakar

  |  21 Feb 2022 7:18 PM IST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருளர் சமுதாயப் பெண் ஊராட்சி மன்ற தலைவரை, அப் பகுதி தி.மு.க பிரமுகர் ஒருவர் சாதிய ரீதியாக துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றது முதல் உள்ளூர் தி.மு.க'வினர் அராஜக போக்கை கையாண்டு வருகின்றனர். அதேபோல் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின ஊராட்சிமன்றத் தலைவர்களை பணி செய்யாமல் தடுத்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டும் இருந்து வரும் நிலையில்,


காஞ்சிபுரம் மாவட்டம், ஆற்பாக்கம் கிராம ஊராட்சி மன்ற பெண் தலைவரான செல்வி ராசி என்பவரை, அப்பகுதி தி.மு.க பிரமுகரான பரசுராமன், ஊராட்சி மன்ற தலைவரை பணி செய்ய விடாமல் ஜாதிய ரீதியாக துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் மன உளைச்சல் அடைந்த ஊராட்சி மன்ற தலைவர் ராசி, ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இருளர் சமுதாய ஊராட்சி மன்ற பெண் உறுப்பினரை, ஜாதிய ரீதியாக திட்டி வன்மத்தோடு செயல்பட்டு வரும் தி.மு.க பிரமுகர் மீது அரசும், தி.மு.க கட்சியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கருத்தாக உள்ளது.

News J

Next Story
கதிர் தொகுப்பு
Trending News