வாக்கு என்னும் மையத்தில், இரவில் அடிகடி மின் வெட்டு! தர்ணாவில் ஈடுபட்ட அ.தி.மு.க'வினர்!

By : Dhivakar
திருப்பூர் மாவட்டத்தில், வாக்குப்பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அரசுப்பள்ளியில், மின்தடை ஏற்படுவதால் அப்பகுதி அ.தி.மு.க'வினர் இதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்துள்ளது. நாளை தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை எண்ணப்படும். இதனால் அனைத்து கட்சிகளும் ஆர்வத்துடன் நாளைய தினத்திற்காக காத்து வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில், வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளதால் அப்பள்ளியில் அனைத்து வாக்கு இயந்திரங்களும் க பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன. காவல்துறை அந்த மையத்திற்கு பாதுகாப்பு வழங்கினாலும், அவ்வப்போது அந்த மையத்தில் மின்தடை ஏற்படுவதாக அ.தி.மு.க'வினர் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். இதனால் தி.மு.க'வினர் அத்துமீறலில் ஈடுபட வாய்ப்பு உள்ளதாக கருதி அ.தி.மு.க'வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே தார்ப்பாய் விரித்து அங்கே இரவு முழுவதும் அமர்ந்து விட்டனர்.
நாளை நடக்கவிருக்கும் தேர்தல் வாக்கு எண்ணிக்கை, நியாயமான முறையில் நடக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.
