Kathir News
Begin typing your search above and press return to search.

பெரம்பலூர்: வழிபாடுகளிலுள்ள விநாயகர் ஆலயம் இடிப்பு, கொந்தளிப்பில் இந்து மக்கள்!

பெரம்பலூர்:  வழிபாடுகளிலுள்ள  விநாயகர் ஆலயம் இடிப்பு, கொந்தளிப்பில் இந்து மக்கள்!

DhivakarBy : Dhivakar

  |  23 Feb 2022 9:29 AM GMT

பெரம்பலூர் : இந்து மக்களால் அன்றாடம் வழிபட்டு வந்த விநாயகர் ஆலயம் இடிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


தமிழகத்தில் கடந்த 8 மாதங்களாக இந்து மத அடையாளங்கள் மற்றும் இந்து மத உணர்வாளர்களுக்கு தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக 'இந்து கோயில்கள் அரசு நிலத்தில் கட்டப்பட்டுள்ளது மற்றும் ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டுள்ளது' என்ற காரணங்களை கூறி, இந்து கோயில்கள் இடிக்கப்பட்டு வருவது அனைத்து இந்து மக்களின் உணர்வுகளையும் பாதித்து வருகிறது.


மேலும் மர்ம கும்பலால் கோயில்களின் சிலைகள் தாக்கப்படுவதும் வழக்கமாகிவிட்டது. அதற்கு சிறந்த உதாரணம் சிறுவாச்சூர் தொடர் சாமி சிலைகள் உடைப்பு.

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம், பேரையூர் கிராமத்தில், பல ஆண்டுகளாக மக்களால் வழிபட்டு வரும் விநாயகர் ஆலயம் இருந்து வருகிறது. இவ்வாலயத்தை ஜே.சி.பி இயந்திரம் ஒன்று இடிப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளத்தில் பரவலாக பரவி வருகிறது. இதனை கண்டித்து இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் தொடர்ந்து இந்து மத அடையாளங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதும், அதனை எதிர்த்து இந்து முன்னணி குரல் எழுப்புவதும் வழக்கமாகி வருகிறது.

Hindu Munnani

Next Story
கதிர் தொகுப்பு
Trending News