வெள்ளியங்கிரி செல்லும் பக்தர்களிடம் கட்டணம்: தி.மு.க. அரசுக்கு எதிராக இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!
கோவை மாவட்டம், பூண்டி என்ற ஊரில் உள்ளது வெள்ளியங்கிரி மலைத் தொடர். அங்கு சிவபெருமான் திருக்காட்சி அளிக்கிறார். இக்கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சென்று வருவது வழக்கம்.
By : Thangavelu
கோவை மாவட்டம், பூண்டி என்ற ஊரில் உள்ளது வெள்ளியங்கிரி மலைத் தொடர். அங்கு சிவபெருமான் திருக்காட்சி அளிக்கிறார். இக்கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சென்று வருவது வழக்கம். ஆனால் சமீப காலமாக திமுக அரசு வனத்துறையின் மூலமாக கட்டணத்தை வசூல் செய்து வருவதை கண்ட இந்து முன்னணி ஏற்கனவே கண்டனம் தெரிவித்திருந்தது.
பூண்டி வெள்ளிங்கிரி மலையேறும் பக்தர்களிடம் வனத்துறை கட்டணம் வசூல்.
— Hindu Munnani (@hindumunnaniorg) February 28, 2022
பக்தர்கள் மன வருத்தம் இதை கண்டித்து இருட்டு பள்ளத்தில் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம்.#இந்துமுன்னணி #பூண்டி #வெள்ளியங்கிரி #கோவை pic.twitter.com/mtfck7AKb0
இதனையடுத்து தொடர்ந்து வனத்துறையினர் பக்தர்களிடம் கட்டணம் வசூல் செய்து வந்ததை கண்டிக்கும் வகையில், இந்து முன்னணி நிர்வாகிகள் இருட்டு பள்ளத்தில் திமுக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது போன்ற கட்டணங்கள் வாங்குவதை வனத்துறையினர் கைவிட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்தனர்.
Source, Image Courtesy: Twiter