இயற்கை பேரிடர் நிதி: தமிழகத்துக்கு வாரி வழங்கிய மத்திய அரசு!
By : Thangavelu
மழை, புயல், நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்படும் தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு கூடுதல் நிதியாக 1,682 கோடி ரூபாய் வழங்குவதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு கொட்டித்தீர்த்த கனமழையால் விவசாய பயிர்கள் மழை நீரால் மூழ்கியது. இதனால் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு அதிகாரிகள் சேதம் பற்றி நேரடியாக ஆய்வு செய்து அந்த அறிக்கையை மத்திய அரசுக்கு சமர்பித்தது. அதன்படி 2021, 2022 நிதியாண்டில் இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் நிவாரணப் பணிகளுக்காகத் தேசியப் பேரிடர் சமாளிப்பு நிதியில் இருந்து ஏற்கனவே மத்திய அரசு வழங்கியிருக்கிறது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போது மேலும் கூடுதலான நிதியுதவியாக தமிழகத்துக்கு 352 கோடியே, 85 லட்ச ரூபாய், புதுச்சேரிக்கு 17 கோடியே 86 லட்சம் ரூபாயாக உள்ளது. அதே போன்று மற்ற மாநிலங்களுக்கும் கூடுதலான நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
Source, Image Courtesy: Polimer