தஞ்சை பெரிய கோயிலுக்குள் கனரக வாகனம் உலா! தூங்குகிறார்களா அதிகாரிகள்?
By : Dhivakar
தமிழகத்தின் புகழ், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் வளாகத்திற்குள்ளே கனரக வாகனம் ஒன்று உலா வரும் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
தமிழகத்தில் கடந்த 8 மாதங்களாக இந்து மத அடையாளங்களையும், நம்பிக்கைகளையும் சிதைக்கும் செயல்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இது தமிழக இந்துக்களிடையே மனவேதனையடையச் செய்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தின் புகழ் தஞ்சை பெரிய கோவில் என்றழைக்கப்படும் பிரகதீஸ்வரர் ஆலய வளாகத்திற்குள்ளேயே, கனரக வாகனம் ஒன்று உலா வரும் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இதை கண்ட இணையவாசிகள் பலர் "புனித தலங்களின் தொன்மையை பாதுகாக்கும் லட்சணம் இதுதானா?" என்று பலரும் கண்டனக் குரல்களை எழுப்பி வருகின்றனர்.
தொல்லியல்துறை நிர்வாகிகளும் அதிகாரிகளும் , இந்து சமய அறநிலையத் துறையும் தூங்குகிறதா? போன்ற கேள்விகளும் எழுகிறது.
Will @tnhrcedept take any action at all? Are the useless officials of @ASIGoI doing anything at all to protect the heritage of this @UNESCO Heritage site ? This is no ordinary temple but the ancient Sri Brahadiswara Temple - Thanjavur pic.twitter.com/fD7ziHtGYy
— trramesh (@trramesh) March 4, 2022