Kathir News
Begin typing your search above and press return to search.

கடவுள் முருகனை 'தறுதலை' என குறிப்பிட்ட சினிமா தயாரிப்பாளர்! பிரச்சாரத்தில் வேல் ஏந்திய முதல்வர், நடவடிக்கை எய்துவாரா?

கடவுள் முருகனை தறுதலை என குறிப்பிட்ட சினிமா தயாரிப்பாளர்! பிரச்சாரத்தில் வேல் ஏந்திய முதல்வர், நடவடிக்கை எய்துவாரா?

DhivakarBy : Dhivakar

  |  7 March 2022 1:38 AM GMT

சென்னையில் சமீபத்தில் நடந்த திரைப்பட விழாவில், தமிழ் கடவுள் முருகனை அவதூராக குறிப்பிட்டு தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியது, இந்து மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழகத்தில் மட்டும் இந்துமத கடவுள்களை அவமானப்படுத்துவதும், கேலி செய்வதும் கிள்ளுக்கீரையாகிப் போனதால் ,சிறிதும் புராண ஞான மற்றவர்கள் கூட இந்து மதப் புராணங்களை மேடையில் கேலிசெய்து, முட்டாள்களின் கைதட்டல்களை பெற்று வருகின்றனர். இதன் வரிசையில் சமீபத்தில் சினிமா தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த கே ராஜன், சென்னையில் நடைபெற்ற திரைப்பட விழாவில் பங்கேற்று, புராணங்களை வைத்து படிப்பினைகள் சொல்லித்தருகிறேன் என்ற பேரில், தமிழ் கடவுள் முருகனை அவமதித்து பேசியுள்ளார்.


அவர் பேசியதாவது : நாரதன் மாம்பழத்தை வைத்து சிவபெருமானின் புதல்வர்களுக்கு போட்டி ஒன்று நடத்தினான். "உலகத்தை எவர் விரைவில் சுற்றி முடிக்கிறார்களோ அவர்களுக்கு இந்த மாம்பழம் என்ற ஞானப்பழம் அளிப்பேன்!" என்று கூறினான்.

உடனே விநாயகர் தன் தாய் தந்தையான சிவன் மற்றும் பார்வதியை சுற்றிவந்து இவர்கள் தான் என் உலகம் என்று நாரதருக்கு உணர்த்தி, மாம்பழத்தை பெற்றுக்கொண்டார். எனக்கு உலகம் தாய் தந்தையர் மட்டுமே என்று விநாயகருக்கு தெரிந்துள்ளது.

ஆனால் தறுதலை முருகனுக்கு தெரியவில்லை, மயிலை கொண்டு உலகத்தையே சுற்றி வந்தான். பின்பு கோவித்துக்கொண்டு பழனி மலை மேல் கோமணத்துடன் அமர்ந்து கொண்டான்.


இவன் எப்பொழுது கோமனத்தின் மீது வேட்டி கட்டுவான் என்று நான் பார்க்க ஆவலாக இருக்கிறேன். இவனுக்கு ஆறுபடை வீடுகள் வேற....

என்ற கீழ்த்தரமான இந்தப் பேச்சுக்கு தற்பொழுது பல கண்டனக் குரல்கள் எழுந்து வருகிறது.


இதே தயாரிப்பாளர் கே ராஜன், எட்டு மாதங்களுக்கு முன்பெல்லாம் நடைபெற்ற திரைப்பட விழாக்களில், இந்து மத கடவுள்கள் குறித்து அவதூறாகப் பேசியதில்லை. ஆனால் இப்பொழுது மட்டும் பேசுகிறார் என்றால் அவருக்கு யார் கொடுத்த தைரியம் இது?


எதனால் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சை பேசினார்?


2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது வேல் ஏந்திய நாத்திகர் முதல்வர் ஸ்டாலின், தயாரிப்பாளர் ராஜன் மீது நடவடிக்கை எய்துவாரா?

என்று பல கேள்விகள் எழுகின்றன.

Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News