தொன்மையான ராமர் கோயிலை அலுவலகமாக பயன்படுத்தும் இந்து சமய அறநிலைத்துறை!
By : Dhivakar
தஞ்சாவூரில் மிகத் தொன்மையான ராமர் கோயிலின் பெரும்பகுதியை, இந்து சமய அறநிலைத்துறை ஆக்கிரமித்து அலுவலகமாக பயன்படுத்தி வருகிறது.
சமீபத்தில் தஞ்சை பெரிய கோயிலுக்குள், கனரக வாகனம் ஒன்று உலா வரும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது, இதனை பார்த்த பல இணையவாசிகள் இதுதான் தொன்மையான கோயிலை பாதுகாக்கும் லட்சணமா என்று கேள்விகளை எழுப்பி வந்தனர்.
இதன் வரிசையில், தற்பொழுது தஞ்சையிலுள்ள தொன்மையான அழகிய பெரிய ராமர் கோயில் ஒன்றை, இந்து சமய அறநிலையத் துறை 'கமிஷனர் அலுவலகமாக' பயன்படுத்தி வருகிறது.
"இந்து சமய அறநிலையத்துறையின் இச்செயல் HRCE Act'ற்க்கு முற்றிலும் எதிரானது. அதுமட்டுமல்லாமல் இந்து சமயத்தின் கலாச்சாரம், பண்பாடு மற்றும் ஆகம விதிகளுக்கு எதிராகவுள்ளது" என்று டி ஆர் ரமேஷ் இந்து சமய அறநிலையத் துறையின் இச் செயல்பாட்டை எதிர்த்து தன் டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.
மேலும் அக்கோயிலை, எவ்வாறு இந்து சமய அறநிலையத் பயன்படுத்தி வருகிறது என்பதை விளக்க பல புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார் டி ஆர் ரமேஷ் :
இப்புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதை கண்ட பலர் இந்து சமய அறநிலையத் துறையின் இச்செயலுக்கு கண்டனக் குரல்களை எழுப்பி வருகின்றனர்.