கோவையில் பல கோடி மதிப்பிலான ரிசர்வ் சைட் ஆக்கிரமிப்பு!
By : Thangavelu
கோவை மாநகராட்சிக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான ரிசர்வ் சைட்டில் தனியார் சார்பாக கடைகள் கட்டப்பட்டு வருவதை மாநகராட்சி கண்டுகொள்ளாமல் இருப்பது அதிர்ச்சியடைய செய்துள்ளது. முதலில் வடவள்ளி பேரூராட்சியாக இருந்த சமயத்தில் வடவள்ளி, தொண்டாமுத்தூர் சாலையில் ஒரு ஏக்கர் 25 சென்ட் பரப்பிலான இடம், லேஅவுட்டாக மாற்றப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. அந்த இடத்தில் 10.12 சென்ட் நிலம் பொது ஒதுக்கீட்டுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது.
ஆனால் அந்த இடத்தில் பேரூராட்சி நிர்வாகம் எந்த பணியையும் செய்யவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையில் அந்த இடம் 16 ஆண்டுகளுக்கு முன்னர் முறைகேடாக விற்பனை செய்யப்பட்டது. தற்போது பேரூராட்சி தடுக்கவில்லை, பொது இடத்தையும் மீட்கவில்லை. அதே சமயம் வடவள்ளி பேரூராட்சி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டதால் வணிக மதிப்பும் உயர்ந்தது.
இதனை தொடர்ந்து கடந்த ஆண்டில் மட்டும் ஒன்பது கடைகள் கட்டப்பட்டு அதில் உணவகம் மட்டும் செயல்பட்டு வருகிறது. கடை கட்டும்போது மவுனமாக இருந்த மாநகராட்சி தற்போது இந்த இடம் மாநகராட்சி பராமரிப்பில் இருக்கின்ற பொது ஒதுக்கீட்டு இடம் என்ற விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை அந்த இடத்தை மீட்கவில்லை, அதற்கான நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. மேலும், அந்த இடத்தை சட்டப்படி சென்று மீட்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Source, Image Courtesy: Dinamalar