Kathir News
Begin typing your search above and press return to search.

நாகை: வாய் பேச முடியாத இந்து பெண்ணை "கிறிஸ்தவ மதம் மாற" கட்டாயப்படுத்தும் கணவன் வீட்டார்!

நாகை: வாய் பேச முடியாத இந்து பெண்ணை கிறிஸ்தவ மதம் மாற கட்டாயப்படுத்தும் கணவன் வீட்டார்!

DhivakarBy : Dhivakar

  |  13 March 2022 7:25 AM GMT

நாகை: வாய் பேச முடியாத திருமணமான பெண்ணை, கணவன் குடும்பத்தினர் கிறிஸ்துவ மதத்திற்கு மதம் மாற தொடர்ந்து வற்புறுத்துவதால், கலெக்டர் அலுவலகம் முன்பு பாதிக்கப்பட்ட பெண் தர்ணா போராட்டம் நடத்தினார்.


தென்னிந்தியாவில் கடந்த சில மாதங்களாக கட்டாய மதமாற்ற சர்ச்சை வலுப்பெற்று வருகிறது.


"நீ மதம் மாறினால் தான் உன் கல்வி படிப்பை செழுமையாக்க முடியும்" என்று பள்ளி நிர்வாகம் கட்டளையிட்டதால், தஞ்சை மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.


இதனால் பல இந்து அமைப்புகள் கட்டாய மதமாற்ற குற்றங்களை தடுக்க, மாநில அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.


இதன் வரிசையில், நாகை பகுதியில் தமிழரசி மகள் விமலாதேவி என்ற வாய்பேச முடியாத பெண்ணுக்கும், குணசேகரன் மகன் சங்கருக்கும் 2019'இல் திருமணம் ஆனது. திருமணம் முடிந்த பின் சங்கர் வேலைக்காக சிங்கப்பூர் சென்று விட்டார். இந்நிலையில் ஷங்கர் குடும்பத்தினர் விமலாதேவியை கிறிஸ்தவ மதத்திற்கு மாற வற்புறுத்தி வந்தனர். மதம் மாற மறுத்த விமலாதேவி, தன் பிறந்த வீட்டிற்கு திரும்பி வந்து 3 ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வருகிறார்.


தன்னை கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி அப்பகுதி மகளிர் காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விமலாதேவி கூறுகிறார். இதனையடுத்து நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, நேற்று விமலாதேவி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

தமிழகத்தில் விமலாதேவி போன்று பல ஆண்களும் பெண்களும் கட்டாய மதமாற்ற அழுத்தத்தை சந்தித்து வருகின்றனர். இதனை தடுக்க கர்நாடக மாநில அரசு இயற்றியது போல் தமிழக அரசும் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை கொண்டு வர வேண்டும், என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.

Twitter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News