Kathir News
Begin typing your search above and press return to search.

"ஜெய் ஸ்ரீராம் கோஷம் அனைவரையும் பிரிக்கிறது, அல்லாஹு அக்பர் கோஷம் அனைவரையும் இணைக்கிறது" சென்னை நியூ கல்லூரியில் மாணவர்கள் போராட்டம்!

ஜெய் ஸ்ரீராம்  கோஷம் அனைவரையும் பிரிக்கிறது, அல்லாஹு அக்பர் கோஷம் அனைவரையும் இணைக்கிறது சென்னை நியூ கல்லூரியில் மாணவர்கள் போராட்டம்!

DhivakarBy : Dhivakar

  |  17 March 2022 8:50 AM GMT

சென்னையிலுள்ள இஸ்லாமிய கல்வி நிறுவனமான 'நியூ காலேஜ்' கல்லூரியில், ஹிஜாப் சர்ச்சை குறித்து கர்நாடக உயர் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து அக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.


நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக கர்நாடக ஹிஜாப் சர்ச்சை பேசுபொருளானது. இடதுசாரி ஊடகங்களின் மூலம் பரப்பப்பட்ட பொய் பிரச்சாரங்களால், கர்நாடக ஹிஜாப் சர்ச்சை இந்திய நாட்டை தாண்டி சர்வதேச கவனமும் பெற்றது. இதனால் ஹிஜாப் அணிவது குறித்து பலரும் தங்கள் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.


இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க, "கல்வி நிலையங்களில் ஹிஜாப் மற்றும் காவி துண்டுகள் அணிந்து வரக்கூடாது" என்று கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்தது.


இந்நிலையில், கர்நாடக உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் 16-ம் தேதியன்று, "ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த கர்நாடகா அரசின் நடவடிக்கை சரிதான்" என்று தீர்ப்பளித்தது.


இத்தீர்ப்பை எதிர்த்து, சென்னை இஸ்லாமிய கல்வி நிறுவனமான நியூ காலேஜில் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போராட்டத்தில் "ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் அனைவரையும் பிரிக்கிறது அல்லாஹு அக்பர் என்ற கோஷம் அனைவரையும் இணைக்கிறது" போன்ற வாசகங்கள் எழுப்பி அக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு வழியாக கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் ஹிஜாப் சர்ச்சை ஓரளவு ஓய்ந்து வரும் நிலையில், தமிழகத்தில் கல்லூரி ஒன்றில் மாணவர்கள் இத்தகைய கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தப்படுவது வேதனைக்குரியது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News