இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான குளத்தில் மண் திருட்டு: விவசாயிகள் ஆட்சியரிடம் புகார்!
By : Thangavelu
திருப்பூர் மாவட்டம், பள்ளப்பாளையத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான குளம் உள்ளது. அங்கு சுமார் 200 லோடுக்கும் அதிகமான மண் திருடு போயிருப்பதாக விவசாயிகள் ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தாலுகாவிற்கு உட்பட்ட சாமளாபுரம் என்கின்ற கிராமம் உள்ளது. அதற்கு உட்பட்டவையாக பள்ளபாளையம் உள்ளது. அங்கு இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான குளம் உள்ளது. அவை பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இக்குளத்தை ரோட்டரி சங்கம் புனரமைத்துள்ளது.
ஆள்நடமாட்டம் இல்லாத காரணத்தினால் அங்கு சிலர் 200 லோடுக்கும் அதிகமான மண்ணை திருடி சென்றுள்ளனர். இதனை கவனித்த விவசாயிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக விவசாயிகள் கூறும்போது, பள்ளபாளையத்தில் சுமார் 10 அடி உயரத்திற்கு மண் கொட்டி கரைகள் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது அங்கு 200 லோடுக்கும் அதிகமான மண் திருடு போயுள்ளது என தெரிவித்தனர். உடனடியாக குளத்தை பராமரித்து குற்றவாளிகளை கைது செய்யவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Source: Dinamalar
Image Courtesy: Nakkheeran