Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க ஆட்சியில் மது குறித்து புகார் அளித்த கண் பார்வையற்றவர் மீது காவல்துறையினர் 'வெறி' தாக்குதல்!

தி.மு.க ஆட்சியில் மது குறித்து புகார் அளித்த கண் பார்வையற்றவர் மீது காவல்துறையினர் வெறி தாக்குதல்!

DhivakarBy : Dhivakar

  |  18 March 2022 10:23 AM GMT

புதுக்கோட்டை: மது விற்பனை குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்த பார்வையற்ற மாற்றுத்திறனாளியை, காவல்துறை அதிகாரிகள் லத்தியால் தாக்கியுள்ளனர்.


தமிழகத்தில் தி.மு.க ஆட்சி பொறுப்பை ஏற்றதும் முதல் காவல்துறையினரின் நடவடிக்கை மக்களை வெறுப்படையச் செய்து வருகிறது. சட்டம் ஒழுங்கைக் காக்கும் காவல் துறையினரின் அதிகாரப் போக்கால் அப்பாவி சாமானியர்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர்.


இதன் வரிசையில், புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா கவரப்பட்டியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் சங்கர்(29). இவர் பார்வையற்ற மாற்றுத் திறனாளி ஆவார். சங்கரிடம் அப்பகுதி பள்ளி மாணவர்கள் மது விற்பனை குறித்து கூறியுள்ளனர். இதனையடுத்து சங்கர் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100-க்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இது குறித்து புகார் அளித்துள்ளார்.


இச்செய்தி அறிந்த விராலிமலை காவல் நிலைய போலீசார், சங்கரின் வீட்டிற்குச் சென்று சங்கரிடம் "ஏன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு இது குறித்து புகார் அளித்தாய்?" என்று மிரட்டியுள்ளனர். இதனையடுத்து, போலீசாருக்கும் சங்கருக்கும் வாக்குவாதம் தீவிரமடைய, போலீசார் சங்கரை காவல் நிலையத்திற்கு வருமாறு அழைத்தனர். சங்கர் வர மறுக்கவே, அவரை வீட்டிலேயே வைத்து லத்தியால் தாக்கியுள்ளனர். பின்னர் காவல் நிலையத்திற்கு சங்கரை அழைத்துச் சென்றனர். காவல் நிலையத்தில் பணியில் இருந்த அசோக்குமார், பிரபு மற்றும் செந்தில் ஆகிய மூன்று காவல் அதிகாரிகள், சங்கரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.இதை தட்டிக் கேட்காமல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பத்மாவும் அமைதியாக இருந்தது மட்டுமல்லாமல் சங்கரை திட்டியும் உள்ளார்.


போலீஸ்காரர்களால் தாக்கப்பட்ட மாற்றுத்திறனாளி சங்கர், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சங்கரை தாக்கிய செந்தில், அசோக்குமார் மற்றும் பிரபு ஆகிய 3 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


அ.தி.மு.க ஆட்சியின்போது தூத்துக்குடி சாத்தான்குளத்தில், தந்தை மகன் இருவர் காவல் நிலையத்தில் வைத்து தாக்கப்பட்டு இறந்ததாக கூறப்படும் சம்பவத்தை, சமூக போராளிகளும், தி.மு.க ஆதரவு ஊடகங்களும் ஊதி பெரிதாக்கினர்.


இப்பொழுது அந்த போராளிகளும், தி.மு.க ஆதரவு ஊடகங்களும் எங்கே?? என்று பலர் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.





Next Story
கதிர் தொகுப்பு
Trending News