Kathir News
Begin typing your search above and press return to search.

பங்குனி உத்திர திருவிழாவில் சட்டவிரோத கிறிஸ்தவ மதப் பிரச்சாரம்! தமிழகத்தில் மட்டும்தான் இப்படி நடக்கும்!

பங்குனி உத்திர திருவிழாவில் சட்டவிரோத கிறிஸ்தவ மதப் பிரச்சாரம்! தமிழகத்தில் மட்டும்தான் இப்படி நடக்கும்!
X

DhivakarBy : Dhivakar

  |  20 March 2022 10:05 AM GMT

செங்கல்பட்டு: பங்குனி உத்திர திருவிழாவின் போது, பக்தர்கள் மத்தியில் கிறிஸ்தவ மதமாற்ற கும்பல் மதமாற்றப் பிரச்சாரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


தமிழகத்தில் கடந்த எட்டு மாதங்களாக, பொது இடங்களில் இந்து மக்களை குறிவைத்து கிறிஸ்தவ மதமாற்ற கும்பல் கட்டாய சட்டவிரோத மதமாற்ற செயல்களை அரங்கேற்றி வருகிறது.

"இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!" என்று பல இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதன் வரிசையில், செங்கல்பட்டு மாவட்டம் திரிசூலமலை கோயிலில், நேற்று வெகுவிமர்சையாக நடந்த பங்குனி உத்திரத் திருவிழாவின் போது, பக்தர்களை மாற்றத்திற்கு உட்படுத்த, மறைவான காட்டுப்பாதையில் பகுதியில் அமர்ந்து கட்டாய மதமாற்ற பிரச்சாரத்தை கிறிஸ்தவ மதமாற்ற கும்பல் அரங்கேறியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இச்செய்தியை அறிந்த இந்து முன்னணியினரும், பொதுமக்களும் இணைந்து சட்டவிரோத மதப் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தி காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக சட்டவிரோத மதமாற்ற பிரச்சாரங்கள் அரங்கேறி வருவதும், அதனை இந்து முன்னணி அமைப்பு தடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது


Next Story
கதிர் தொகுப்பு
Trending News