திண்டிவனம் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் பெருமாள் கோயில் அருகில் எரிப்பு!
By : Thangavelu
திண்டிவனம் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் பெருமாள் கோயில் அருகாமையில் கொட்டி எரிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் மாசடைவது மட்டுமின்றி பக்தர்களுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
திண்டிவனம் நகராட்சி முழுவதும் லாரி, லாரியாக சேகரிக்கப்படும் குப்பைகள் பெருமாள் கோயில் அருகாமையில் கொட்டி எரிக்கப்படுவதற்கு இந்து முன்னணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுபற்றி இந்து முன்னணி முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது: திண்டிவனம் பெருமாள் கோயில் அருகே நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் உள்ள குப்பைகளை சேகரித்து பெருமாள் கோயில் அருகே கொட்டி எரிப்பதால் பக்தர்கள் மற்றும் குடியிருப்பு வாசிகள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர் இதைப்பற்றி நகராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காத காரணத்தால் போராட்டம் அறிவித்த பிறகு குப்பைகள் அகற்றம். இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
Source, Image Courtesy: Facebook