அம்மன் கோயில் நிலத்தில் மீன் கடை: ஆட்சியரிடம் இந்து முன்னணி புகார்!
By : Thangavelu
இராமநாதபுரம் மாவட்டம், பெரியபட்டினம் அழகு நாயகி அம்மன் கோயில் நிலத்தில் கட்டப்பட்டுள்ள மீன் கடையை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் இந்து முன்னணி புகார் அளித்துள்ளது.
பெரியபட்டினம் அழகு நாயகி அம்மன் கோவில் நிலத்தில் கட்டப்பட்டுள்ள மீன் கடையை அகற்ற கோரி மாவட்ட ஆட்சியரிடம் இந்துமுன்னணி புகார் மனு.
— Hindu Munnani (@hindumunnaniorg) March 24, 2022
மீன் கடை அகற்றப்படவில்லை என்றால் இந்துமுன்னணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு.#இந்துமுன்னணி #பெரியபட்டினம் #savetemple pic.twitter.com/6Pdm1IAxQZ
இராமநாதபுரம் மாவட்டத்திற்கு தினந்தோறும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் செல்வது வழக்கம். அதே போன்று அங்கு செல்பவர்கள் பெரியபட்டினம் அழகு நாயகி அம்மன் கோயிலுக்கு சென்று வருவது வழக்கம்.
இந்நிலையில், அம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் கடை கட்டப்பட்டு அதில் மீன் கடையை வைத்துள்ளனர். இதனால் கோயில் நிலத்தில் வைக்கப்பட்டுள்ள மீன் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று இந்து முன்னணி சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
Source, Image Courtesy: Twiter