அனுமதியின்றி குடியிருக்கும் பகுதியில் தொழுகை: கூம்பு வடிவில் ஸ்பீக்கர் வைத்து அட்டகாசம்!
By : Thangavelu
ஈரோடு மாநகரில் லெனின் வீதியில் மஸ்ஜித் நூர் டிரஸ்ட் ஒன்று உள்ளது. அங்கு வீடு என்று மாநகராட்சி சார்பில் அனுமதி பெற்று டிரஸ்ட் அமைத்து வெள்ளிக்கிழமை தோறும் தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர். அது மட்டுமின்றி மற்றவர்களுக்கு இடைஞ்சல் கொடுக்கும் விதமாக கூம்பு வடிவிலான ஒலிபெருக்கியை கட்டி அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், வெளியூரில் இருந்து தொழுகைக்கு வருபவர்கள் தெருவில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்படுகிறது. இந்த பிரச்சனை ஒரு வருடமாக இருப்பதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். இது குறித்து ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஈரோடு தாசில்தார் இரண்டு தரப்பு மக்களையும் அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி வருகின்ற மார்ச் 31ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், டிரஸ் சார்பில் இன்று (மார்ச் 27) காலை 11 மணிக்கு டிரஸ்ட் கட்டடத்தில் மத நல்லிணக்க விழா நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்த விழாவில் அமைச்சர், மேயர் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
Source: Dinamalar
Image Courtesy: One India