போலீசார் உதவியுடன் கோயம்பேடு சாலையோர கடைகள் அகற்றம்: ஏழை வியாபாரிகள் கதறல்!
By : Thangavelu
கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் சுமார் 150 நடைபாதையில் வைக்கப்பட்டிருந்த கடைகள் அகற்றப்பட்டுள்ளது. இதனால் ஏழை வியாபாரிகள் திமுக அரசுக்கு எதிராக கொந்தளித்துள்ளனர்.
கோயம்பேடு மார்க்கெட்டில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் காய்கறி வாங்கி செல்வது வழக்கம். அதே போன்று அங்கு சிறு வியாபாரிகள் முதல் பெரு வியாபாரிகள் வரை உள்ளனர். சிலர் தள்ளு வண்டியில் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்து வருகின்றனர். அதே போன்று சிலர் நடைபாதையில் ஓரமாக சிறிய கடைகளை வைத்து அதில் காய்கறி மற்றும் பழங்களை விற்று தங்களின் குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே மாக்கெட் நிர்வாக முதன்மை அலுவலர் சாந்தி தலைமையில் சிஎம்டிஏ அதிகாரிகள் திடீரென்று சோதனை நடத்தினர். அப்போது மார்க்கெட் செல்லும் பிரதான சாலையின் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டதாக கூறி ஏராளமான கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் போலீசார் துணையுடன் கடைகளை அப்புறப்படுத்தினர். இதனால் ஏழை வியாபாரிகள் திமுக அரசுக்கு வந்த உடன் எங்கள் வயிற்றில் அடித்துள்ளது என்று கதறினர்.
Source: Dinakaran
Image Courtesy: Dinamalar