Kathir News
Begin typing your search above and press return to search.

மீனாட்சி திருக்கல்யாணம் காண்பதற்கு ஆன்லைனில் முன்பதிவு!

மீனாட்சி திருக்கல்யாணம் காண்பதற்கு ஆன்லைனில் முன்பதிவு!

ThangaveluBy : Thangavelu

  |  1 April 2022 2:06 PM GMT

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருக்கல்யாண உற்சவத்தை காண்பதற்கு ஏப்ரல் 4ம் தேதி முதல் ஏப்ரல் 7ம் தேதி வரை ஆன்லைன் மற்றும் நேரடியாக முன்பதிவு செய்யலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உலக புகழ்பெற்றது. இக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து தரிசனம் செய்வது வழக்கம். அதே சமயம் இது போன்ற திருக்கல்யாணம் சமயங்களில் பல ஆயிரம் கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம். இதனால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக முன்பதிவு செய்து அவர்களுக்கான நேரம் ஒதுக்கப்பட்டால் கூட்டம் சேருவதை தடுக்க முடியும் என கூறப்படுகிறது.

இதனால் திருக்கல்யாண உற்சவ விழாவில் தரிசனம் செய்ய இருக்கும் பக்தர்களின் வசதிக்காக ரூ.200 முதல் 500 வரை கட்டணச் சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Dinakaran

Next Story
கதிர் தொகுப்பு
Trending News