ஆய்வு என்ற பெயரில் அரசு இசைப்பள்ளி ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை: ஜாகீர் உசேன் மீது பரபரப்பு புகார்!
By : Thangavelu
பரத நாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் தற்கொலை செய்வதற்கான எண்ணம் தோன்றியதாக கலை பண்பாட்டு துறை இயக்குனருக்கு இசைப்பள்ளி ஆசிரியை ஒருவர் பரபரப்பான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
ஜாகீர் உசேன், தமிழ்நாடு கலை பண்பாட்டு துறையினர் 17 மாவட்ட அரசு இசைப்பள்ளி கலையியல் அறிவுரைஞராக முதலமைச்சர் ஸ்டாலின் நியமனம் செய்து உத்தரவிட்டார். இவர் ஆய்வு என்ற பெயரில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள இசைப்பள்ளிக்கு சென்று ஆசிரியைகளிடம் அத்துமீறுவதாக தற்போது புகார் எழுந்துள்ளது.
இது பற்றி தமிழ்நாடு கலை பண்பாட்டு துறை இயக்குனர் காந்திக்கு ஒரு ஆசிரியை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நாங்கள் இசை குடும்பத்தை பாரம்பரியமாக கொண்டுள்ளோம். மேலும், அரசு இசைப்பள்ளியில் பணியாற்றி வருகிறேன். கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி கலையியல் அறிவுரைஞர் ஜாகீர் உசேன் எங்கள் பள்ளியை ஆய்வு செய்வதாக வந்திருந்தார். அந்த சமயத்தில் தலைமை ஆசிரியை அறைக்கு தன்னை மட்டும் தனியாக வரச்சொன்னார். நான் சென்றதும் கதவை மூடிவிட்டார். தகாத முறையில் நடந்து கொண்டார். அது மட்டுமின்றி மற்ற ஆசிரியைகளுக்கு வகுப்பு எடுக்க போகிறேன் என்று தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தினார். இந்த செயல் எங்களின் மனதை வேதனைப்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக நான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன். இருந்த போதிலும் நடைபெற்ற சம்பவத்தை கடிதம் வாயிலாக சொல்ல வந்ததை சொல்லியுள்ளேன். நீங்கள் இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள் என்று எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Source, Image Courtesy: Dinamalar